Thursday, 9 January 2025

Rental Agreement

 அன்பு மகள் யாழினிக்கு,

நீயும் (அண்ணன்) பட்டுவும் எப்படி இருக்கிறீர்கள்? நலமாகவும் கவனமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக ஒரு அரசும் சரி, தனி மனிதர்களும் சரி மற்றவர்களை சார்ந்தே இருந்தாலும், எப்போதும் தற்சார்பு நிலையோடு இருக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் வாழவும், நல்ல சூழ்நிலையோ கெட்ட சூழ்நிலையோ சமாளிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது சிறுவர்களாக இருந்து வளர்ந்து வந்தாலும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பவர்களாக இருக்க கூடாது. உதவியாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் பெரியம்மா/பெரியப்பா வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கு சிரமத்தை கொடுக்காமல் உங்கள் வேலைகளை நீங்களே பார்த்து கொள்ளவேண்டும். உங்களையும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் எப்போதும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளவேண்டும். எது கிடந்தாலும் அப்படியே போட்டுவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது. அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளவேண்டும். நம்மை துன்புறுத்துபவர்களிடம் இருந்து விலகிச் செல்ல வேண்டும். மிகவும் தொல்லை கொடுத்தால் உடனே நம்பிக்கைக்கு உரிய மற்றவர்களிடம் அல்லது பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.

யாழினி, இப்போது பட்டு கொஞ்சம் பெரியவன் ஆகிவிட்டதால் சில நேரம் சீண்டும்போது இவன் வேண்டாம் என்றும் எனக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்கிறாய். அது எவ்வளவு முட்டாள்தனம் என்று தெரியுமா?

அவனுக்கு விவரம் தெரியும் முன்பும் தெரிந்த பின்பும் உன்னை பாதுகாப்பதிலும் உனக்கு கற்றுக்கொடுப்பதிலும் குறியாக இருந்து வருகிறான். நான் நமது குழந்தைகள் பொது அறிவிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என நினைத்து பாடம் நடத்தும்போது, நீங்கள் சரியாக ஞாபகம் வைத்திருக்கா விட்டாலும், கேள்விக்கு பதில் சொல்லாவிட்டாலும், உங்களை அடித்து துவம்சம் செய்யும்போது, அவனை அடிக்கும்போதெல்லாம் கலங்காமல் இருப்பவன், உன்னை அடிக்கும்போது கலங்கி விடுவான், எப்படி தன் தங்கையை அடியில் இருந்து காப்பாற்றுவது என்று யோசிப்பான். உனக்கு பதிலாக அவன் பதில் சொல்ல முயற்சிப்பான். அவனை அடிக்கும்போது அலுக்காமல் இருக்கும் அவன், உன்னை அடிக்கும்போது அவளுக்கு பதிலாக என்னை அடியுங்கள் என்று வருவான். நீ கேள்விக்கு பதில் தெரியாமல் முழிக்கும்போது , பதில் சொல் யாழினி, பதில் சொல் யாழினி என்று உனக்கு தைரியம் கொடுப்பான். நீங்கள் சிறு குழைந்தைகளாக இருக்கும்போது மருந்து களை சங்கு அல்லது மூடி மூலம் கொடுக்க முயற்சிக்கும்போது நீ கன்னாபின்னா என்று அழுது கத்தி அட்டகாசம் பண்ணும்போது அவன் இவங்க எப்படி கத்தினாழும் விடமாட்டாங்க, அதனால் மருந்தை குடித்துவிட்டு போகலாம் என்று பழகி கொண்டான்.

நாம் கொச்சியில் வாசிக்கும்போது எதோ ஒரு கேள்விக்கு நீ தவறாக பதில் சொல்லி நான் அதற்க்கு உன்னை வெளுக்கும்போது அவன் கதறி அழுது அப்படி இல்லை யாழினி இப்படி சொல்லு என்று உனக்கு சொல்லிக்கிட்டே இருந்தான். அவனைப்போல ஒருவன் உனக்கு அண்ணனாகவோ சகோதரனாகவோ கிடைத்ததற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவனைப் பற்றி பேசுவதால் உன்னை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் இல்லை. அவனுடைய பொறுமையும், பொறுப்பும், அன்பும், பாசமும், சகிப்புத்தன்மையும் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. பல விஷயங்களில் என்னை விட புத்திசாலியாகவும் எதையும் எளிதில் கற்றுக்கொள்கிற தன்மையும் அவனிடம் நிறைய இருக்கிறது. 

உங்களை பெற்றதால்தான் எங்களுக்கு பெற்றோர் என்ற அந்தஸ்து கிடைத்து சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கிறோம். அப்படிப்பட்ட உங்களையே சரியாக படிக்கவில்லை என்பதற்க்காக மிகவும் கொடூரமாக அடித்து துன்புறுத்தி இருக்கிறேன். அதற்காக மிகவும் வெட்கப்படுகிறேன். உங்களிடமும் அம்மாவிடமும் அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குழந்தைகளை அடித்து வளர்ப்பதில் தவறில்லை. அனால் என்னை போல் கடவுளின் தூதுவர்களான அன்பு செல்வங்களை அப்படி துன்புறுத்தக்கூடாது. அது என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இப்படி எழுதுவதை வைத்து, அப்பா திருந்தி விட்டார் இனி அடிக்க மாட்டார் என்று நினைக்க வேண்டாம். 

நம் குழந்தைகள் ஒழுக்கமாகவும், தைரியமாகவும் இருப்பார்கள், யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள், யாரிடமும் ஏமாற மாட்டார்கள், பொய் புரட்டு சொல்லாமலும் , தங்கள் உயிர் உடமைகளை பத்திரமாக பார்த்துக்கொண்டு, நன்றாக படித்துக்கொண்டும் ,அவர்கள் இருவரும் நல்லபடியாக பிழைத்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கினால் தான் அடியில் இருந்து தப்பிக்கலாம் . அது உங்கள் கைகளில் தான் உள்ளது.

யாழினி, உன்னுடைய அழகிய தமிழ் பேச்சு தான் எனக்கு மிகச்சிறந்த tonic. அதனாலதான் உனக்கு "தேன் சிட்டு" என்று பேர் வைத்திருக்கேன். அதை எப்போதும் கேட்க வேண்டும் என்று தோன்றும். நான் சமீபத்தில் பொங்கல் வந்திருந்தபோது இரவு பகலாக வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரங்களில் மிகவும் அக்கறையாக என் அருகிலே இருந்து, நான் கேட்டும் / கேட்காமலும் பட்டு எனக்கு பல உதவிகளை செய்தான். அது எனக்கு அந்த வேலையை சீக்கிரமாக முடிக்க உதவியது. அந்த சமயங்களை நினைத்து பார்க்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது .அவனுக்கு மிகவும் நன்றி உள்ளவனாகவும் இருக்கிறேன்.

இதெல்லாம் நான் இப்போது என் சொல்கிறேன் என்றால், நான் ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் நீங்கள் ஒருபக்கம் என்று நம் குடும்பம் பிரிந்து கிடக்கிற இந்த தருணத்தில், உங்களைப்பற்றி நினைத்து பார்த்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. அம்மாவும் (வெண்ணிலா) நம்மை ஒரு பக்கம் பார்க்க வேண்டும், அவங்க அப்பாவை ஒரு பக்கம் பார்க்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறாள், நாங்கள் எங்கிருந்தாலும் நம் குழந்தைகள் சமத்தாக வாழ்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் உருவாக்க வேண்டும். தற்போது பள்ளி முதல் கல்லூரி மட்டுமல்ல போகிற / வருகிற இடமெல்லாம் கெட்டவர்களும் கஞ்சா குடிக்கிகளும் சாராய குடிக்கிகளும் பைக் வெறியர்களும் பெருகி மற்றவர்களுக்கும் பெண்களுக்கும் துன்பம் விளைவிக்கிற இந்த காலத்தில், அதையும் மீறி தான் வாழ்ந்து காட்ட வேண்டும். ஒரு பக்கம் கெட்டவை இருந்தாலும் மறுபக்கம் நல்லவைகளும் இருந்தே ஆகவேண்டும் . நிச்சயமா இருக்கும். அதனால் மிகவும் கவனமுடன் விழிப்புணர்வுடன் இருந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். 

பெரியம்மா வீட்டில் எது செய்தாலும் பிடித்த விஷயமாக இருந்தால் நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும் , பிடிக்காத விஷயமாக இருந்தால் புறக்கணித்துவிட்டு கடந்து செல்ல பழக வேண்டும்.

என்ன யாழினி ? அன்புள்ள யாழினி க்கு என்று கடிதம் எழுத ஆரம்பித்து பட்டு பற்றியே அதிகமாக எழுதி இருக்கிங்க என்ற உன் mind voice கேட்கிறது. அதற்க்கு காரணம் இருக்கிறது.

நாம் எல்லோரும் சேர்ந்து பொன்னுசாமி தாத்தாவுக்கு விரைவில் பூரண குணம் அடைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.

BE happy , ENJOY the LIFE .

என்றும் உங்கள் நலனில் அக்கறை உள்ள அப்பா,

அழகர் !






வாடகை ஒப்பந்த பத்திரம்


2024 ம் வருடம் மார்ச்  மாதம் 5 ஆம் தேதி, எண் 15/7A , தரைத்தளம், முதல் தெரு, வள்ளலார் நகர், சென்னை -26 என்ற முகவரியில் வசித்து வரும் திருமதி வெண்ணிலா  அவர்கள் 1வது பார்ட்டியாகவும் (வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி  வட்டம், பெத்தாச்சிகுடியிருப்பு கிராமம், கதவு எண் 544/A ல் வசித்து வரும் திரு. செ.அழகு அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)


மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான 
எண் 15/7B ,  முதல் தெரு, வள்ளலார் நகர், சென்னை -26 என்ற முகவரியில் முதல் தளத்தில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி
குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1 வது மற்றும் 2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்,

1. நம்மில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் 51,500/ (ரூபாய்  ஐம்பத்தோராயிரத்து  ஐந்நூரு மட்டும்) 
பிரதி ஆங்கில மாதம் 5-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி முன் பணமாக இன்று 05/03/2024 ரூபாய் 1,50,000/- மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி தொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு
வட்டி ஏதும் கிடையாது.

3. 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும்.
  மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2வது பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகம் / குடிநீர் அலுவலகத்தில்  தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 12 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது 05/03/24 தேதி முதல் 04/03/24 தேதி வரையிலான 12 மாத காலத்திற்கு உட்பட்டது.

6. 12 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 12 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

9. 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

10. 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.

11. 2வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை காலி செய்ய 1வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.



வாடகை சொத்து விபரம்.

15/7, 01-முதல் தளம்,  வள்ளலார் நகர், வடபழனி, சென்னை -600026 என்ற விலாசத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள வீடு மட்டும் இந்த வாடகை ஒப்பந்தத்திற்கு உட்பட்டது.




1வது பார்ட்டி                                                                                                           
2வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)                                                                                      (வாடகைதாரர்)



சாட்சிகள்


1)




2)

Wednesday, 20 November 2024

Kattidam

 கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தம்

2024 ஆம் வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் தேதியில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சிறுகப்பட்டி ஊராட்சி, பெத்தாச்சிகுடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் திரு செ.அழகர் (கட்டிட உரிமையாளர்) Party -01.

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சிறுகப்பட்டி ஊராட்சி, புளியன்குடியிருப்பு  கிராமத்தில் வசிக்கும் திரு வெள்ளையன் & V.சூர்யா  (Building ) Party -02. ஆகிய இரு தரப்பும் சேர்ந்து எழுதிக் கொண்ட ஒப்பந்த பத்திரம் என்னவென்றால்,

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சிறுகப்பட்டி ஊராட்சி, பெத்தாச்சிகுடியிருப்பு  கிராமம் Door No:544 A உள்ள இடத்தில கட்டப்பட்டுள்ள தரைதளத்திற்கு மேல் முதல் மாடியில் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க Party-01 மற்றும் Party-02 இருவரும் பேசி ஒப்புக்கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கைய்யொப்பம் செய்து கொடுத்துள்ளனர்.

Building Contractor செய்ய வேண்டிய வேலைகள் பின்வருமாறு:

1. முதல் மடியில் Column Starter marking செய்து, column கம்பி கட்டி , Box அடைத்து concrete இட்டு எழுப்ப வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளபடி உட்புறச்சுவர், வெளிப்புற சுவர்- கைப்பிடி சுவர் உட்பட கட்டி , பூச்சு வேலை செய்து கொடுக்க வேண்டும்.

தேவையான இடத்தில் வரைபடத்தில் உள்ளபடி Sill Slab, Lintel, Loft, Sunshade ஆகியவை சென்டரிங் வேலை செய்து கம்பி கட்டி கான்க்ரீட் போட்டு முடிக்க வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளபடி Roof Beam & Slab சென்டரிங் வேலை செய்து, கம்பி கட்டி , கான்க்ரீட் இட்டு வேலை முழுதும் செய்து கொடுக்க வேண்டும்.

Clay Tiles அல்லது Cooling Tiles மொட்டை மாடிக்கு ஏற்றி சிமெண்ட் கலவை கொண்டு தேவையான Sloping கொடுத்து சிறந்த முறையில் Tiles Velai செய்து தர வேண்டும்.

Roof Height - 10'6" அடி உயரம்.

Parapet Height -3'0" அடி உயரம்.

மேற்கண்ட வேலைகள் முழுதும் செய்து முடிப்பதற்கு ரூபாய். 340 / சதுர அடிக்கு என்று இரு தரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

மேற்கண்ட வேலைக்கு Area அளக்கும்போது, கட்டிடத்தின் நீளம் X அகலம் அளக்கப்பட்டு முழு Rate வழங்கப்படும்.

வடக்குப்பக்கத்தில் Roof மட்டத்தில் வரும் 4'0" அகலமுள்ள Cantilever Beam & Slab க்கு 50% (அதாவது ரூபாய் 170 / Sft ) Rate வழங்கப்படும்.

தெற்குப்பக்கம் உள்ள படி Area 7'0" மட்டம் மற்றும் மேற்கு பக்கம் Roof மட்டத்தில் வரும் 2'0" Cantilever Slab க்கும் சேர்த்து படி Area வுக்கு முழு Rate வழங்க்கப்டும்.

வடக்குமேற்குப் பக்கத்தில் Roof மட்டத்தில் வரும் 2'0" அகலமுள்ள Cantilever Slab க்கு 25% (அதாவது ரூபாய் 85 / Sft ) Rate வழங்கப்படும்.

EXTRA வேலைகள்:

1. தரைத்தளத்தில் இருந்து முதல் மாடிக்கு 3'0" அடி அகலமுள்ள 15 படியும் ஒரு Landing ம் வரைபடத்தின் படி plywood சென்டரிங் அடித்து கம்பி வேலை செய்து சரியான மட்டம் , vertical பார்த்து cover block வைத்து கான்க்ரீட் இட்டு வேலை செய்து தர வேண்டும்.

அதற்கான Rate ரூபாய்.12,000/- Lumpsum 

2. தரைத்தளத்தில்  "L " வடிவத்தில் சமையலறை மேடை சென்டரிங் அடித்து, கம்பி கட்டி , கான்க்ரீட் போட்டு வேலை செய்து தர வேண்டும்.

அதற்கான Rate ரூபாய்.3,000/- Lumpsum

3. தரைத்தளத்தில் உள்ள வெளிப்புற, உட்புற சுவர்கள் மற்றும் Ceiling ஆகியவைகளுக்கு சாரம் அமைத்து பூச்சு வேலை செய்து தர வேண்டும்.

அதற்கான Rate ரூபாய்.20 Per Sft (வெளிப்புற சுவர் )

அதற்கான Rate ரூபாய்.17 Per Sft (உட்புற  சுவர் & Ceiling )

பூசப்பட உள்ள சுவர், Ceiling, Loft மற்றும் Sunshade ஆகியவற்றின் area அளக்கப்டும்.

பூசப்பட உள்ள சுவர் area அளக்கும்போது ஜன்னல் மற்றும் கதவு Openings Area  ஒரு பக்கம் கழிக்கப்படாது மறுபக்கம் முழுதும் கழிக்கப்படும்.

வாசக்கால்/கதவு & ஜன்னல் நிலைகள் மற்றும் Grill Gate / ஜன்னல் Grills Clamp களை, சுவரை உடைத்து சரியான முறையில் மட்டம் மற்றும் vertical பார்த்து கான்க்ரீட் கொண்டு Packing செய்து தர வேண்டும்.

அதற்கான Rate ஒரு உருப்படிக்கு ரூபாய். 400/-

வேலை செய்யும் முறை:

1.கம்பி வேலை (Rebar Work):  முழு Rod ஐ , Bend நிமிர்த்தி வரைபடத்தின் படி cutting , bending செய்து தேவையான நீளத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் இரட்டை கட்டுக்கம்பி வைத்து கட்ட வேண்டும்.

Rings சரியான அளவில் சதுரமாகவோ செவ்வகமாகவோ வளைத்து தேவையான அளவில் 90 டிகிரி / 135 டிகிரி Hook அமைக்க வேண்டும். கண்டிப்பாக Cover கனம் கழித்து கம்பிகளின் நீளம் வெட்டி வேலை செய்ய வேண்டும்.

2.சென்டரிங் வேலை (Centering & Shuttering Work): அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளபடி சரியான அளவு மற்றும் level இல் நல்ல தரமான பொருட்கள் கொண்டு மட்டமாகவும் செங்குத்தாகவும் சென்டரிங்/shuttering வேலை செய்ய வேண்டும். Gap இருந்தால் சரியான முறையில் அடைத்து தர வேண்டும். ஒவ்வொரு முறை/ஒவ்வொரு வேலை கான்க்ரீட் போடுவதற்கு முன்பும் பின்பும் சென்டரிங் மட்டம் மற்றும் vertical பார்த்து சரி செய்யப்பட வேண்டும்.

3.கான்க்ரீட் வேலை (Concrete Work): கான்க்ரீட் போடும் தளத்தை குப்பைகள் அகற்றி சுத்தம் செய்து மட்டம் பார்த்து வரைபடத்தில் உள்ள அளவுப்படி ஒரே சீரான முறையில் கான்க்ரீட் போட வேண்டும். Column மற்றும் Roof Beam கான்க்ரீட் வேலை செய்யும்போது சீரான முறையில் Vibrator பயன்படுத்த வேண்டும்.

4. கட்டு வேலை (Masonry Work): கற்களை நன்றாக தண்ணீர் கொண்டு நனைத்து சிமெண்ட் மணல் கலவையை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து முதல் Layer ஐ மட்டம் சரி செய்து ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு Layer ம் ஒரே மாதிரி கலவை கணம் வைத்து நூல் கட்டி மட்டம் பார்த்து நன்றாக சந்து பதிந்து வரைபடத்தின் படி கட்ட வேண்டும்.

5.பூச்சு வேலை (Plaster Work): Button Mark வைத்து Electrical மற்றும் Plumbing Pipe Line Packing எல்லாம் செய்த பிறகு, சுவரை நன்றாக நனைத்து தயார்படுத்தி சிமெண்ட் மணல் கலவையை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து சரியான முறையில் மட்டமாகவும் ஒரே மாதிரியாகவும் வேண்டிய கலவை கணத்தில் பூச்சு வேலை செய்து தர வேண்டும்.

Roof Slab கான்க்ரீட் போடும்போது வேலை ஆட்களுக்கு ஒருவேளை சாப்பிடும் Tea & பலகாரமும் விட்டு உரிமையாளர் வழங்க வேண்டும்.

Roof Slab கான்க்ரீட் போடுவதற்கு தேவையான கான்க்ரீட் கலவை எந்திரம் மற்றும் வண்டி வாடகையில் பாதி (50%) வீட்டு உரிமையாளர் கொடுக்க வேண்டும்.

சுவர் மற்றும் Ceiling பூச்சு வேலை செய்வதற்கு முன்பு electrical மற்றும் plumbing pipe line வலை வைத்து பேக்கிங் வேலை செய்வதற்கு House Owner வேலை ஆட்களுக்கு Muster சம்பளம் தர வேண்டும்.

மேற்கண்ட வேலைகள் இல்லாமல், இதர வேலைகள் செய்ய வேண்டியிருந்தால், அதற்கு கீழ்கண்டவாறு Muster சம்பளம் கொடுக்க வேண்டும்.

 Mason (கொத்தனார்) - ரூபாய் .900 / Day 

Helper-Male  (ஆண் உதவியாளர் ) - ரூபாய் .650 / Day

Helper-Female  (பெண்  உதவியாளர் ) - ரூபாய் .450 / Day


கைய்யொப்பம்                                                                                                  கைய்யொப்பம் 

House Owner                                                                                                              Buidling Contractor 


 பணம் செலுத்தும் நிலைகள்:

முன்பணம் 

7'0" மட்டம் column கான்க்ரீட் வேலை completion

Sill Slab மட்டம் கட்டுவேலை completion

Lintel  மட்டம் கட்டுவேலை completion (Lintel, Sunshade, Loft & லோ Low Roof உள்பட)

Roof மட்டம் கட்டுவேலை completion (Column பாக்கி கான்க்ரீட் உள்பட)

Roof Slab & Beam Completion (சென்டரிங், கம்பி வேலை & கான்க்ரீட் உள்பட)

உட்புற தடுப்பு சுவர் மற்றும் Cupboard சுவர் completion.

கைப்பிடி சுவர் completion

வாசக்கால்/நிலை மற்றும் Grill/Gates fixing Completion

சீலிங் பூச்சு வேலை completion 

உட்புற சுவர் பூச்சு completion

வெளிப்புற பூச்சு completion 

மேல் மாடி Tiles வேலை completion

இதர சில்லறை வேலைகள் completion

மொத்த வேலையும் செய்து ஒப்படைத்தவுடன்:

மொத்தம்

மடக்கு படி அமைத்தல்

Kitchen மேடை அமைத்தல்: 


தரை தளம் 

முதல் மாடி 



  


Sunday, 23 February 2020

(பாரதீய ஜல்ஸா பார்ட்டி)

(பாரதீய ஜல்ஸா பார்ட்டி)

இப்ப பக்தாள்ஸ் & ஊப்பிஸ் களால் ஒருத்தர் மீது ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு உத்தமர் மாதிரி திரியறார் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. சரி அதை ஒரு வாதத்திற்கு உண்மை என்று வைத்துக்கொண்டாலும், அந்த பெண்ணை ஏமாற்றிய செயலுக்கு நிச்சயம் அவரின் மனசாட்சியே அவரை கொல்லும். அல்லது பாதிக்கப்பட்ட பெண்ணே சட்டத்தின் மூலம் ஆதாரங்கள் இருந்தால் தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். அப்படிதான் பாரதிய ஜல்ஸா பார்ட்டி MLA க்களுக்கு ஸமீப காலமாக தண்டனை வாங்கி தரப்படுகிறது. தற்போது ஏன் இந்த பிரச்சினை வருகிறது என்றால் , கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சார் எனக்கு ஹெல்ப் பண்ணுங்க சார் நான் பெங்களூரு ஹொஸ்பிடலில் இருக்கிறேன் என்று கேட்டு பார்த்தார். உதவி கிடைக்கலை போல. (கண்டிப்பாக உதவியிருக்கணும்). இந்த சம்பவத்தை வைத்து பொய்மான் குஜினி ரசிகர்கள் பண உதவி செய்து தங்கள் அரசியல் எதிரியை பலிவாங்க அந்த பெண்ணிடம் சில வீடியோ க்கள் வாங்கி டிங்கேரிங் புட்டி பார்த்து வெளியிடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சங் பரிவார் கும்பலின் தமிழக கோயில்களின் ஆதிக்கத்தை ஒழிக்க ஆரம்பித்தவுடன் அந்த கூட்டம் ஆட்டம் காண ஆரம்பித்து விட்டது. அதனால் எந்தெந்த வகையில் கேவலப்படுத்தலாம் என்று செயல்படுகிறார்கள். இரண்டாவது ஒரு வேலை உண்மையாக இருந்தால் இது அவர்களுடைய இருவரின் அந்தரங்க விஷயம். இதனால் நாட்டுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் பாரதிய ஜல்ஸா பார்ட்டியின் வரலாற்றை பார்ப்போம்.
வரலாறு என்றால் ரொம்ப காலத்திற்கு முன்பு செல்ல வேண்டாம். சம கால வரலாற்றை பார்ப்போம்.

1) இந்திய வரலாற்றிலேயே (கர்நாடகா )சட்டமன்றத்தில் இருந்து கொண்டு BF பார்த்துக்கொண்டிருந்த MLA க்களை கொண்ட கட்சி.
2) கோயிலில் ஒரு சிறுமியை ஒரு வாரம் வைத்து கற்பழித்த கட்சி அது மட்டுமில்லாமல் அதற்க்காக சட்ட நடவடிக்கைகளை எடுக்கவிடாமல் MLK க்கள் தலைமையில் போராட்டம் நடத்திய கட்சி.
3) உன்னாவ் பிஜபி MLA விடம் வேலை கேட்டு வந்த 16 வயது சிறுமியை கற்ப்பழித்து செய்து, அதற்க்கு நியாயம் கேட்டு UP முதல்வர் வீட்டிற்கு சென்ற அந்த பெண்ணின் அப்பாவை தற்கொலை செய்து, அம்மாவை லாரி ஏற்றி கொன்று கடைசியா நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்த பெண்ணையே உயிருடன் தீ வைத்து கொளுத்தி இவ்வளவு அணிஞாயங்கள் செய்த கட்சி. இப்ப அந்த MLA சிறைக்குள் இருக்கிறார் என்பது நாடறிந்த செய்தி.
4) போன வாரம் கூட ஒரு பஜபி MLA கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டிருக்கிறார்.
5) ஒரு பிரபல கஞ்சா சாமியார் தன் மனைவியையே பணத்திற்க்காக தான் சொன்னபடி கேட்காத காரணத்தால் கொன்று விட்டு குற்றச்சாட்டுக்கு ஆளான ஆளுக்கு சப்போர்ட் செய்யும் கட்சி.
6) உலகத்திலே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு வந்த கட்சி.
7) உலகிலேயே அதிகப்படியான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான நபர்களை கொண்ட கட்சி.
8) இந்தியாவிலே பெண்களுக்கு எதிரான அதிகப்படியான குற்றங்கள் நடக்கும் மாநிலத்தை ஆளும் கட்சி.

இவ்வளவும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம் என்பதுபோல் samples தான்.

இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதா??

அதானல்தான் சொல்கிறோம் சங் பரிவார்களும் அவர்களை ஆதரிப்பவர்களும் மனித குல துரோகிகள் என்று.

இப்பேற்பட்டவர்களுக்கு அடுத்தவர்களை குறை சொல்வதற்கு என்ன தார்மிக அறம் இருக்கிறது. முதலில் அந்த கும்பலில் இருப்பவர்களை இந்திய நாட்டுக்கே தலைகுனிவாய் இருப்பவர்களை திருத்தி விட்டு அடுத்த பக்கம் வரவும்.

இன்னும் சில படங்களில் 



Monday, 27 January 2020

வளைகாப்பு வாழ்த்து

வளைகாப்பு வாழ்த்து

நண்பர் ராம்மோகன் என்பவர் தன்னுடைய மனைவி சாருமதி அவர்களின் வளைகாப்பு விழாவிற்கு வாழ்த்து ஒன்று என்னையும் கவிஞனாக கருதி எழுதி தரும்படி கேட்டார். நானும் கவிஞன் ஆகிற முயற்சியில் எதாவது கிறுக்கலாம் என்று பின்வருமாறு எழுதி கொடுத்தேன். படிப்பவர்கள் குற்றம் குறை இருந்தால் மன்னிக்கவும்.

பிறைமதி, நெற்றி நிறைய குங்குமம்!
வான்மதி, முகம் நிறைய ஆனந்தம் !
முழுமதி, வயிறு நிறைய பிள்ளை!
அறிவுமதி ஆன அழகான மழலை!
வெண்மதி, மனம் நிறைய மகிழ்ச்சி!
நிம்மதி வேண்டும் தாயும் சேயும் நலமாக!
சிறு மதி சிறப்பாக வளர்ந்து!
பெரு மதி ஆக பார் போற்ற வாழ்ந்து!
சாரு மதி மனம் பொங்கிட வேண்டும்!

வாழிய வாழியவே!

Friday, 6 December 2019

கொல்லிவாய் பிசாசு:

கொல்லிவாய் பிசாசு:

நான் சிறுவனாக இருக்கும்போது எந்த குழந்தையாவது சாப்பிட அடம்பிடித்தாலோ அல்லது வேறு எதாவது சேட்டைகள் செய்தாலோ நிலாவைக் காட்டி சோறு ஊட்டறது , பூச்சாண்டி காட்டி ஊட்டறது போய் கொல்லிவாய் பிசாசு வரப்போகுது என்று பயமுற்படுத்துவார்கள்.

அப்போது எனக்கு கொல்லிவாய் பிசாசு எப்படி இருக்கும் என்று தோன்றியது.
அதைவிட கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் யாராவது திடீர்னு இறந்து விட்டால் நேரங்கெட்ட நேரத்தில் பல இடங்களுக்கு போய் வந்ததால் கொல்லிவாய் பிசாசு அடித்து கொன்று விட்டதாக கிராமத்தில் சொல்வார்கள்.

அப்போதும் அந்த கொல்லிவாய் பிசாசு எப்படி இருக்கும் எங்கே இருக்கும் என்று பார்க்கும் ஆவல் தோன்றியது.

அதன்பிறகு கோடைகாலங்களில் கிராமத்தை சுற்றி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் இரவு வேடிக்கைகள் (நாடகம் , கரகாட்டம் , ஒயிலாட்டம் , திரைப்படம் ) பார்க்க இரவு நடந்து போவோம்.

அப்போது சில திசைகளில் இருந்து மரங்களுக்கு இடையே தீப்பற்றி கொழுந்து விட்டு எரியும். அதைத்தான் கொல்லிவாய் பிசாசு நம்மை பயமுறுத்த வந்துவிட்டது. அந்த பக்கம் பார்க்கக்கூடாது என்பார்கள். ஒருவர்க்கு ஒருவர் மிக அருகில் சென்று பயத்துடன் கடந்து போவோம். பெரும்பாலும் இந்த மாதிரி நிகழ்வுகள் வரிசையாக நிற்கும் பனைமரங்களிடயே தான் அதிகம் ஏற்படும்.

பின்னாட்களில் வெப்ப காலத்தில் கடும் உராய்வால் மரம் தீப்பிடித்து கொண்டதைத்தான் கொல்லிவாய் பிசாசு என்று சொல்லியிருக்கிறார்கள் என்று உணர்ந்தாலும் , இந்த பேர் எப்படி வந்தது , மனிதர்கள் இறப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று யோசித்துகொண்டிருந்தேன்.

பல வருடங்கள் கழித்து கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் படித்து முடித்து அதன் பிறகு 10 வருடம் கழித்து பாலகுமாரனின் உடையார் நாவல் படித்தபோதுதான் கொல்லிவாய் பிசாசு எப்படி எங்கிருந்து வந்தது என்று ஓரளவுக்கு புரிந்தது.

அது எப்படி என்று பகிர்ந்து கொள்கிறேன்.

சோழர் குல ஆட்சி தமிழகத்தில் உச்சம் அடைய ஆரம்பித்த காலத்தில் சுந்தர சோழர் என்ற மன்னர் ஆட்சி புரியும்போது தங்களுடைய நாட்டின் எல்லை விரிவுபடுத்தியபோது ஏற்பட்ட போரில் சுந்தர சோழரின் மூத்த மகன் ஆதித்ய கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தலையை கொய்து கொன்று விடுகிறான். அப்போது பாண்டிய அரச ஆபத்துஉதவிகள்  அதற்கு பதிலடி கொடுக்க சரியான படை வலிமை இல்லாத காரணத்தால் வேறு வழியில் ஆதித்ய கரிகாலனை பழிவாங்க நினைத்திருந்தார்கள்.

அதன்படி ரவிதாசன் என்பவன் தலைமையில் பில்லி , சூனியம் , மந்திரம் போன்ற செயல்களில் நம்பிக்கை கொண்டு , அதற்க்கான வேள்விகள் செய்து சோழ நாட்டில் கலவரமும் அமைதியின்மையும் மன்னரும் வாரிசுகளும் உடல்நலம் குன்றி சாக வேண்டும் என்று முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த நம்பிக்கை சோழ நாட்டிலோ பாண்டிய நாட்டிலோ இருந்ததில்லை. மலைப்பகுதியான சேர நாட்டில் உள்ள முன்குடுமிக்காரர்கள் மனித சக்தியை தவிர இந்த உலகத்தில் சில சூட்சம சக்திகள் இருப்பதாகவும் அவற்றை கட்டுப்படுத்தி பயன்படுத்த தெரிந்தால் தாங்கள் நினைத்ததெல்லாம் செய்துகொள்ளலாம் என்று நம்பி அவ்வாறே பலவித பயிற்சிகள் , மந்திரங்கள் செய்து மற்றவர்களை துன்புறுத்தவும் மற்றும் காரியங்கள் சாதித்து கொள்ளவும் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து அந்த பழக்கத்தை தங்கள் வாரிசுகளுக்கும் கற்றுக்கொடுத்து வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான் இன்றைய பிரபல கேரள மாந்த்ரீகர்கள்.

அந்த சமயத்தில் சேர நாட்டு மந்திரவாதிகளின் உதவியுடன் ஆள் நடமாட்டமில்லாத மலைப்பகுதிகளில் நடு இரவுகளில் ரவிதாசன் தலைமையில் மண்டையோடு முதலியவற்றைக் கொண்டு மந்திரங்கள் செய்து பேய்களை சோழ நாட்டில் அவிழ்த்து விட்டதாக நம்பப்படுகிறது.


ஆதித்ய கரிகாலன் எப்படி கொல்லப்பட்டான் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆனால் அவனை கொன்றது இந்த ரவிதாசன் தலைமையிலான குழுதான் என்று பின்னர் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு ஆண்கள், பெண்கள் , சிறுவர்கள் , உறவினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள். கொலைகாரர்கள் பிராமணர்கள் என்பதால் குற்றவாளிகளை கொல்லவில்லையாம். ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டு வீரநாராயண (வீராணம்) ஏரியில் மிதந்தாக சொல்லப்படுகிறது.

சரி இதற்கும் கொல்லிவாய் பிசாசுக்கும் என்ன சம்மந்தம் என்றால், ரவிதாசன் குழு அடர்ந்த காடுகளில் இருந்து நள்ளிரவில் மந்திரம் செய்து சூட்சம சக்திகளை நாட்டுக்குள் அனுப்பி பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள் என்று நம்படுகிறதல்லவா? அவையெல்லாம் அவர்கள் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காடுகளில் இருந்து ஏவப்பட்டதாக நம்பப்பட்டது. அதனால் ஊருக்குள் யாருக்காவது பேய் பிடித்திருந்தது என்றால் கொல்லிமலை பிசாசு , கொள்ளிவாய் பிசாசாக பயங்கரமாக உருவாக்கப்படுத்தப்பட்டு சோழ நாட்டில் மட்டுமல்லாமல் சோழர்கள்  அதன் பிறகு மொத்த தமிழ்நாட்டையும் ஆண்டதால் எங்கும் பரவியிருக்கிறது . அது இன்றும் தொடர்கிறது.

இதெல்லாம் ஒரு matter . இதையெல்லாம் ஒருவன் மெனக்கெட்டு எழுதியிருக்கிறான் என்று நினைக்கிறீர்களா ?

வரலாறு முக்கியம் அமைச்சரே !!!! 


















Wednesday, 4 December 2019

திருவள்ளுவரை வைத்து மதவாதிகளும் அரசியல்வாதிகளும் கலகம் செய்துகொண்டிருக்கையில் , அவர் எக்காலத்திற்கும் ஏற்ற பல குறள்களை எழுதி சென்றுள்ளார், அதில் ஒன்றிரண்டை படித்து பார்த்து அதன் படி நடக்க வேண்டும் என்று மன உறுதி கொண்டு தேடும் போது இன்றைய corporate உலகத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு குறள் கண்ணில் பட்டது , அந்த குறள் எந்த குறள் அதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.


திருக்குறளில் MANAGEMENT


அதற்கு அச்சாரமாக ஒரு குறளையாவது நண்பர்களுடன் பகிர்ந்து விடுவது என்று Leadership அதிகாரத்துக்குப் போனேன். எங்கய்யா இருக்கு அந்த அதிகாரம் என்கிறீர்களா? இறைமாட்சி.
முதல் குறளே ஒரு புத்தகம்  எழுதும் அளவுக்குச் செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது. இயன்றவரை சுருக்கமாய்த் தர முயல்கிறேன்.
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

கொஞ்ச நேரம் ராஜா மந்திரி கோட்டை எல்லாம் மறந்து விடுங்கள்.
படை = Task force அல்லது Trouble Shooters : எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்தாலும், Failure Mode Effect Analysis எல்லாம் செய்தாலும் Crisis வரத்தான் வரும். அந்த Crisis களை எதிர்கொள்ளும் திறன் மிக்க ஒரு Team இருத்தல் வேண்டும்.
குடி = Team. மக்கள் என்பதும் குடி என்பதும் வேறுபட்டவை. மக்கள் எல்லோரையும் குறிக்கும். இறையாண்மையை மதிக்கும் பொறுப்பான Citizen கள்தான் குடி. Department இன் இலக்கை உணர்ந்து அதற்காக வேலை செய்யும் Subordinate கள். வெறும் Group ஆக இல்லாமல் Team ஆக இருத்தல்.
கூழ் = Funds தன் Department க்கு Management ஐ சமாதானம் செய்து Funds பெறும் வல்லமை வேண்டும். Budget ல Maintenance க்கு Allocation இல்லைப்பா. மீதம் இருந்தா பாக்கலாம், என்கிற மாதிரி பேச்சுக்கள் வராதவாறு பார்த்துக் கொள்தல்.
அமைச்சு = Advisors, People who can substitute boss in his absence. தான் இல்லாத போது டிபார்ட்மெண்ட் ஐ திறம்பட நிர்வகிக்கும் நம்பர் டூக்கள்.
நட்பு = Cordial relationship with other departments. தானும் தன் டீமும் ஒரு தீவாக செயல்படாமல் இதர துறைகளுடன் நட்பாய் இருப்பது.
அரண் = Cultivating Integrity நிறுவனங்களில் பெரிய பிரச்சினையே அடுத்த டிபார்ட்மெண்ட் ஆசாமிகள் வந்து ‘உங்க பாஸ் இருக்கானே…’ என்று ஆரம்பித்து அவதூறு பரப்புதல். அப்படி யாராவது சொல்லும் போது ‘I know my boss you get lost’ என்று Subordinate கள் சொல்லும்படியான கலாச்சாரத்தை விதைத்தல். National integrity போல Department Integrity.
கொஞ்சம் விரிவாக உதாரணங்களுடன் எழுதினால் ஏறக் குறைய ஒரு புஸ்தகம் அளவுக்கு ஆகிவிடும் என்பது சரிதானே?

Saturday, 29 April 2017

சமூக விவசாயம் செய்ய வேண்டும்:


"எந்த நாட்டு இளைஞனுக்கு எக்கைப் போன்ற இதயம் இருக்கிறதோ, அந்த இளைஞனுக்கு வாள் தேவையில்லை" கவிஞர் Iqpal !

எக்கைப் போன்ற இளைஞர் கூட்டத்தின் கையில் வாட்கள் இருக்குமானால்....?

ரத்தத்தைத் தாருங்கள் ; நான் உங்களுக்கு விடுதலையை வாங்கித்தருகிறேன்"
என்றார் நேதாஜி .

ரத்தத்தைத் தருவதற்கு ஒரு கூட்டமே தயாராக இருந்தால்...?

எக்கு இதயம் கொண்ட இளைஞர் கூட்டம் ரத்தத்தைத் தந்ததால் பெறப்பட்டதே இன்று நாம் பெற்ற சுதந்திரம். பலரின் உயிரற்ற சடலங்களே, விடுதலை என்ற வார்த்தையை உயிர்ப்பித்தன. அவர்கள் தங்கள் எலும்பை விடுதலை வேள்விக்கு விறகு ஆக்கியதால்தான் நாம் வெளிச்சம் பெற்றோம். இந்த வரலாற்றைக்கூட முழுமையாக உணர்ந்தோம் இல்லை.

ஏதோ காந்தி தாத்தாவும் நேரு மாமாவும் கடைக்குப் போய் மிட்டாய் வாங்கி வந்தது மாதிரி இந்தியாவுக்கு விடுதலையை பாக்கெட் போட்டுக் கொடுத்தார்கள் என்ற தவறான வரலாறு, தவறான பாதைக்கே இட்டுச்  செல்லும்.

முதல் இந்திய சுதந்திர போர் எது என்று கேட்டால், 1857-ம் ஆண்டு வட இந்தியாவில் நடந்த சிப்பாய் கலகத்தை சொல்வார்கள், தமிழ்நாட்டு பிள்ளைகள். அப்படித்தான் அவர்களுக்கு கற்பிக்கப்பட்டு உள்ளது.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக முதல் விடுதலை போரை முதலில் தொடங்கியவர்கள் தமிழர்கள். சிப்பாய் கலகத்துக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே பிரிட்டிஷாரை கூறுபோட்டவர்கள் தென்னவர்கள்.

'செந்நெல் மணியரிசி சீரகச் சம்பாவை 
உன்னத் தருவான் உயிர் தருவான் ஆனாலும் 
ஒரு நெல் மணிகூட வெள்ளையருக்குக் காணிக்கை 
வரிக்கட்டாக் காரணத்தால் நெற்கட்டான் செவ்வலென்பார்'
என்று கவிஞர் ம.முத்தரசால் பாடப்பட்டவன் நெற்கட்டான்செவல் பூலித்தேவன். "முடிந்த அளவு கப்பம் கட்டு " என்று இறங்கிவந்த ஆங்கில கவர்னர் கெரானிடம், 'ஒரே ஒரு நெல் மணியைக் கூடத் தரமாட்டேன் ' என்று சொல்லி விரட்டியவன் பூலித்தேவன். ஓராண்டு ஈராண்டு அல்ல 17 ஆண்டுகள் இடைவிடாமல் போராடினான். 'பூலித்தேவனின் தலையை வெட்டிக் கொண்டுவந்து மேலிடத்திற்கு அனுப்பி வைக்கிறேன் ' என்று கடிதம் எழுதிய யூசுப் கானின் கையில் சிக்காமல் தப்பியவன் பூலித்தேவன் . பாளையங்கோட்டை சிறையில் தப்பினானா, சங்கரன்கோயில் கோமதியம்மன் கோயிலில் மறைந்தானா என்ற மர்மம் விலகாத மாவீரன் பூலித்தேவன்.

'பாளையக்காரர்கள் கோட்டைக் கட்டக்கூடாது ' என்ற கட்டளையை மீறிக் கோட்டை கட்டியவன் கட்டபொம்மன் .மேஜர் பானர்மேன் விசாரணை என்ற நாடகத்தை நடத்தியபோது, 'எதுவும் சொல்வதற்கு இல்லை ' என்று அலட்சியமாக எல்லாக் கேள்விகளையும் நிராகரித்தவன் கட்டபொம்மன். துரோகத்தால் கைதாகி தூக்கிலிடும் மரத்துக்கு அழைத்துச் செல்லப்படும் முன்பு அவன் நடந்து கொண்ட விதத்தை பார்த்து பறங்கியர்களே மிரண்டு விட்டார்கள்.
விசாரணை அதிகாரியான பானர்மேன் , பிரிட்டிஷ் அரசுக்கு எழுதி அனுப்பிய கடிதத்தில்' 'விசாரணை நடைபெற்ற நேரத்தில் கூடியிருந்தவர்கள் முன்பாகக் கட்டபொம்முவின் போக்கும் நடத்தையும் அஞ்சா நெஞ்சத்துடன் ஏளனத்துடன் இருந்ததை நான் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. தூக்கிலிடும் இடத்துக்கு கட்டபொம்மு உறுதியுடன் வீரத்துடன் நடந்து செல்லும்போது இருபுறமும் வரிசையாக நின்ற பாளையக்காரர்களை இகழ்ச்சியும் வெறுப்பும் தோன்ற உற்றுப் பார்த்தபடியே சென்றார் ' என்று எழுதி அனுப்பினார். சாவு நிச்சயம் என்று தெரிந்த பிறகும் வீரம் விலகாதவன் வீரபாண்டிய கட்டபொம்மன்.

பாஞ்சாலங்குறிச்சியில் இருந்த வாள் , ஈட்டி , கம்பு , வளைதடி , வில் , குதிரை ... ஆகிய அனைத்துப் படைகளுக்கும் தளபதியாக இருந்த மாவீரன் கெவிணகிரி சுந்தரலிங்கம். ராமநாதபுரம் அரண்மனைக்கு கட்டபொம்மனை விசாரணைக்கு ஜான்சன் வரச்சொன்னபோது, கட்டபொம்மனுக்கு முன்னமே அங்கே போய் ராமநாதபுரம் அரண்மனைக்குள் நுழைந்த வீரக்காற்று சுந்தரலிங்கம். கட்டபொம்மனை லெப்டினென்ட் கிளார்க் தாக்க முயற்சிக்க, மாறுவேடம் கலைத்து தாக்குதலைத் தொடுத்தவன் சுந்தரலிங்கம். ஆட்டுக் கூட்டத்துடன் அத்தை மகள் வடிவுடன் போய் ஆங்கிலேயரின் வெடிமருந்து கிடங்கில் குதித்து தற்கொலைப் படையாக மாறிய மாவீரன் சுந்தரலிங்கம்.

'சிவன் மலைக்கும் சென்னி மலைக்கும் இடையில் உள்ள சின்னமலை' என்று அழைக்கப்பட்ட தீரன் சின்னமலைதான் திப்பு சுல்தானுக்கு படைகளை அனுப்பியவன். காவிரிக் கரையிலும் ஓடா நிலையிலும் அரச்சலூரிலும் பிரிட்டிஷ் படைகளை விரட்டியவன். 'பல இடங்களில் தன் பெரும்படையால் வெற்றிபெற்ற மேக்ஸ்வெல் , சிறிய படையிடம் தோற்றார் ' என்று பிரிட்டிஷார் தலைகுனிந்து எழுதக் காரணமானவன். சமையல்காரனால் காட்டிக்கொடுக்கப்பட்டு சங்ககிரியில் வைத்து தூக்கிலிடப்பட்டான் தீரன் சின்னமலை.

'பேரரசுகளுக்குப் பணியாளரும் இழிபிறப்பான பரங்கியருக்குப் பரம எதிரியுமான மருதுபாண்டியர் ' என்று கையெழுத்துப் போட்டு பகிரங்கமாக போருக்கு அழைத்தவர்கள் மருது சகோதரர்கள். 'நீங்கள் பரங்கிகளை எங்கு கண்டாலும் அவர்களை அழித்து ஒழியுங்கள் . மாறாக அதே இழிபிறப்புகளிடம் பணியாற்றினால் உங்கள் சாவுக்குப் பின்னர் மறுமை இன்பம் கிடைக்காது ' என்ற வார்த்தைகளை எழுதவே துணிச்சல் வேண்டும். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தனியாக நின்று எதிர்ப்பதைவிட பிரெஞ்சு ஆதரவையும் திப்பு சுல்தானின் உதவியையும் மராத்தி துந்தியாவாக்கின் ஆதரவையும் பாளையக்காரர்கள் கூட்டணியையும் ஒருங்கிணைத்து ஐக்கியம் கட்ட முயற்சித்தவர்கள் மருது சகோதரர்கள். அதனை முளையிலேயே கிள்ளியெறிந்த பிரிட்டிஷார் வெள்ளை மருதுவையும் சின்ன மருதுவையும் திருப்பத்தூர் கோட்டையில் தூக்கில் போட்டு அவர்களது உறவினர்கள் பலரையும் அந்தமானுக்கு கப்பலில் கடத்தியதும் வரலாறு.

நெற்கட்டான்செவல் பூலித்தேவன்  , பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன், மாவீரன் சுந்தரலிங்கம் , தீரன் சின்னமலை , மருது சாகோதரர்கள் போன்ற விடுதலைக்கு போராடியவர்கள் நமக்கென்ன என்று இருந்திருந்தால் விடுதலைத் தீ மூட்டப்பட்டிருக்காது.

யாரோ போராடுவார்கள் , நமக்கென்ன என்று இவர்கள் இருந்திருந்தால் 200 ஆண்டுகள் கழித்து அவர்களைப் பற்றி பேசிக்கொண்டிருக்க மாட்டோம். இவர்கள் எல்லாம் விவரம் இல்லாமல் (!) ஆங்கிலேயருக்கு எதிராக போராடி துன்பபட்டுக் கொண்டிருந்தபோது சுகவாசிகளாக வாழ்ந்த பல மன்னர்களின் பெயர்கள் இன்று அவர்களது வாரிசுகளின் நினைவுகளிலே இல்லை.

யாரோ சிலர் போராடுவார்கள், நாம் காலை ஆட்டிக்கொண்டு அனுபவிக்கலாம் என்ற காலம் மலையேறி விட்டது. அன்று ஓர் எதிரி . இன்று கண்ணுக்குத் தெரிந்தும் , தெரியாமலும் ஓராயிரம் எதிரிகள் ! அவரவர் மூச்சுக்காற்றை அவரவரே விடவேண்டும் என்பது எவ்வளவு இயற்கையோ , அழுதாலும் அவளவள்தான் பிள்ளை பெற வேண்டும் என்பது எவ்வளவு இயற்கையோ அதைப்போல் நம்மளுடைய உரிமைகளுக்காக, கோரிக்கைகளுக்காக நாமே ஒவ்வொருவரும் போராட வேண்டும்.

பேருந்து பழுதாகி நின்றுவிட்டால் 10 பேர் இறங்கித் தள்ளுகிறார்கள். பல உள்ளேயே உட்கார்ந்துகொண்டு 'சரியாகத்தான் தள்ளுகிறார்களா ?' என்று பார்க்கிறார்கள் . தெருவைப் பார்க்க கவுன்சிலர் வரும்போது கதவை மூடிவிட்டு ஜன்னல் வழியாகப் பார்க்கிறோம் . பொதுக்குற்றத்தை எதிர்த்து பேச தயங்குகிறோம். கைகட்டி வேடிக்கை பார்ப்பவன் கையில் பூக்கள் விழுவதில்லை. மூடிக்கொள்பவன் உடலை தென்றல் தொடுவதில்லை. துன்பப்படாதவனுக்கு இன்பம் இனிப்பதே இல்லை.!

ஓர் எட்டில் வளர்க்காத பிள்ளையும் , ஈரெட்டில் கற்காத கல்வியும் , மூவெட்டில் முடியாத திருமணமும் , நாலெட்டில் பெறாத பிள்ளையும் , ஐயெட்டில் சேர்க்காத செல்வமும் , ஆரெட்டில் தேடாத புகழும் , ஏழெட்டில் சுற்றாத தேசமும் , எட்டெட்டில் கிடைக்காத ஓய்வும் பயனில்லை என்று வாழ்ந்தால் பிறப்புச் சான்றிதழோடு பிறந்து , இறப்பு சான்றிதழோடு இறந்து போவதைத் தவிர வேறு சாதனை எதுவும் இல்லை. சமூகம் எல்லா மனிதனுக்கும் சான்றிதழ் தருவது இல்லை. சிலருக்கு மட்டுமே மரணத்திற்கு பிறகும் சான்றிதழ் தருகிறது. அத்தகைய மனிதனாக ஆக வேண்டுமானால் , குடும்ப எல்லைகளைத் தாண்டி சிந்திக்கப் பழக வேண்டும் . வெறும் கோபம் , விமர்ச்சனம் ஆகியவை பயன்படாது. வீட்டுக்குள் ஆத்திரப்பட்டால் வீதிக்கு தெரியாது . ' தரையை உதைப்பதனால் புழுதி கிளம்புமே தவிர பயிர் முளைக்காது' என்றார் தாகூர் . இங்கு எல்லோரும் தரையை உதைத்துக்கொண்டு முடிந்து போகிறார்கள் . சில பேர் மட்டுமே பயிர் செய்கிறார்கள்.  சமூக விவசாயத்திற்கு நாம் எல்லாரும் தயாராகவில்லையென்றால் , சமூக விரோதிகளிடமிருந்தும் , கொள்ளைக்காரர்களிடமிருந்தும் நாட்டையும் வீட்டையும் யாராலும் காப்பாற்ற முடியாது.