கட்டிடம் கட்டுவதற்கான ஒப்பந்தம்
2024 ஆம் வருடம் நவம்பர் மாதம் 20 ஆம் தேதியில் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சிறுகப்பட்டி ஊராட்சி, பெத்தாச்சிகுடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் திரு செ.அழகர் (கட்டிட உரிமையாளர்) Party -01.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சிறுகப்பட்டி ஊராட்சி, புளியன்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் திரு வெள்ளையன் & V.சூர்யா (Building ) Party -02. ஆகிய இரு தரப்பும் சேர்ந்து எழுதிக் கொண்ட ஒப்பந்த பத்திரம் என்னவென்றால்,
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், சிறுகப்பட்டி ஊராட்சி, பெத்தாச்சிகுடியிருப்பு கிராமம் Door No:544 A உள்ள இடத்தில கட்டப்பட்டுள்ள தரைதளத்திற்கு மேல் முதல் மாடியில் புதிய கட்டிடம் கட்டி கொடுக்க Party-01 மற்றும் Party-02 இருவரும் பேசி ஒப்புக்கொண்டு இந்த ஒப்பந்தத்தில் கைய்யொப்பம் செய்து கொடுத்துள்ளனர்.
Building Contractor செய்ய வேண்டிய வேலைகள் பின்வருமாறு:
1. முதல் மடியில் Column Starter marking செய்து, column கம்பி கட்டி , Box அடைத்து concrete இட்டு எழுப்ப வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளபடி உட்புறச்சுவர், வெளிப்புற சுவர்- கைப்பிடி சுவர் உட்பட கட்டி , பூச்சு வேலை செய்து கொடுக்க வேண்டும்.
தேவையான இடத்தில் வரைபடத்தில் உள்ளபடி Sill Slab, Lintel, Loft, Sunshade ஆகியவை சென்டரிங் வேலை செய்து கம்பி கட்டி கான்க்ரீட் போட்டு முடிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளபடி Roof Beam & Slab சென்டரிங் வேலை செய்து, கம்பி கட்டி , கான்க்ரீட் இட்டு வேலை முழுதும் செய்து கொடுக்க வேண்டும்.
Clay Tiles அல்லது Cooling Tiles மொட்டை மாடிக்கு ஏற்றி சிமெண்ட் கலவை கொண்டு தேவையான Sloping கொடுத்து சிறந்த முறையில் Tiles Velai செய்து தர வேண்டும்.
Roof Height - 10'6" அடி உயரம்.
Parapet Height -3'0" அடி உயரம்.
மேற்கண்ட வேலைகள் முழுதும் செய்து முடிப்பதற்கு ரூபாய். 340 / சதுர அடிக்கு என்று இரு தரப்பும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
மேற்கண்ட வேலைக்கு Area அளக்கும்போது, கட்டிடத்தின் நீளம் X அகலம் அளக்கப்பட்டு முழு Rate வழங்கப்படும்.
வடக்குப்பக்கத்தில் Roof மட்டத்தில் வரும் 4'0" அகலமுள்ள Cantilever Beam & Slab க்கு 50% (அதாவது ரூபாய் 170 / Sft ) Rate வழங்கப்படும்.
தெற்குப்பக்கம் உள்ள படி Area 7'0" மட்டம் மற்றும் மேற்கு பக்கம் Roof மட்டத்தில் வரும் 2'0" Cantilever Slab க்கும் சேர்த்து படி Area வுக்கு முழு Rate வழங்க்கப்டும்.
வடக்குமேற்குப் பக்கத்தில் Roof மட்டத்தில் வரும் 2'0" அகலமுள்ள Cantilever Slab க்கு 25% (அதாவது ரூபாய் 85 / Sft ) Rate வழங்கப்படும்.
EXTRA வேலைகள்:
1. தரைத்தளத்தில் இருந்து முதல் மாடிக்கு 3'0" அடி அகலமுள்ள 15 படியும் ஒரு Landing ம் வரைபடத்தின் படி plywood சென்டரிங் அடித்து கம்பி வேலை செய்து சரியான மட்டம் , vertical பார்த்து cover block வைத்து கான்க்ரீட் இட்டு வேலை செய்து தர வேண்டும்.
அதற்கான Rate ரூபாய்.12,000/- Lumpsum
2. தரைத்தளத்தில் "L " வடிவத்தில் சமையலறை மேடை சென்டரிங் அடித்து, கம்பி கட்டி , கான்க்ரீட் போட்டு வேலை செய்து தர வேண்டும்.
அதற்கான Rate ரூபாய்.3,000/- Lumpsum
3. தரைத்தளத்தில் உள்ள வெளிப்புற, உட்புற சுவர்கள் மற்றும் Ceiling ஆகியவைகளுக்கு சாரம் அமைத்து பூச்சு வேலை செய்து தர வேண்டும்.
அதற்கான Rate ரூபாய்.20 Per Sft (வெளிப்புற சுவர் )
அதற்கான Rate ரூபாய்.17 Per Sft (உட்புற சுவர் & Ceiling )
பூசப்பட உள்ள சுவர், Ceiling, Loft மற்றும் Sunshade ஆகியவற்றின் area அளக்கப்டும்.
பூசப்பட உள்ள சுவர் area அளக்கும்போது ஜன்னல் மற்றும் கதவு Openings Area ஒரு பக்கம் கழிக்கப்படாது மறுபக்கம் முழுதும் கழிக்கப்படும்.
வாசக்கால்/கதவு & ஜன்னல் நிலைகள் மற்றும் Grill Gate / ஜன்னல் Grills Clamp களை, சுவரை உடைத்து சரியான முறையில் மட்டம் மற்றும் vertical பார்த்து கான்க்ரீட் கொண்டு Packing செய்து தர வேண்டும்.
அதற்கான Rate ஒரு உருப்படிக்கு ரூபாய். 400/-
வேலை செய்யும் முறை:
1.கம்பி வேலை (Rebar Work): முழு Rod ஐ , Bend நிமிர்த்தி வரைபடத்தின் படி cutting , bending செய்து தேவையான நீளத்தில் குறிப்பிட்ட இடைவெளியில் இரட்டை கட்டுக்கம்பி வைத்து கட்ட வேண்டும்.
Rings சரியான அளவில் சதுரமாகவோ செவ்வகமாகவோ வளைத்து தேவையான அளவில் 90 டிகிரி / 135 டிகிரி Hook அமைக்க வேண்டும். கண்டிப்பாக Cover கனம் கழித்து கம்பிகளின் நீளம் வெட்டி வேலை செய்ய வேண்டும்.
2.சென்டரிங் வேலை (Centering & Shuttering Work): அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தில் உள்ளபடி சரியான அளவு மற்றும் level இல் நல்ல தரமான பொருட்கள் கொண்டு மட்டமாகவும் செங்குத்தாகவும் சென்டரிங்/shuttering வேலை செய்ய வேண்டும். Gap இருந்தால் சரியான முறையில் அடைத்து தர வேண்டும். ஒவ்வொரு முறை/ஒவ்வொரு வேலை கான்க்ரீட் போடுவதற்கு முன்பும் பின்பும் சென்டரிங் மட்டம் மற்றும் vertical பார்த்து சரி செய்யப்பட வேண்டும்.
3.கான்க்ரீட் வேலை (Concrete Work): கான்க்ரீட் போடும் தளத்தை குப்பைகள் அகற்றி சுத்தம் செய்து மட்டம் பார்த்து வரைபடத்தில் உள்ள அளவுப்படி ஒரே சீரான முறையில் கான்க்ரீட் போட வேண்டும். Column மற்றும் Roof Beam கான்க்ரீட் வேலை செய்யும்போது சீரான முறையில் Vibrator பயன்படுத்த வேண்டும்.
4. கட்டு வேலை (Masonry Work): கற்களை நன்றாக தண்ணீர் கொண்டு நனைத்து சிமெண்ட் மணல் கலவையை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து முதல் Layer ஐ மட்டம் சரி செய்து ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு Layer ம் ஒரே மாதிரி கலவை கணம் வைத்து நூல் கட்டி மட்டம் பார்த்து நன்றாக சந்து பதிந்து வரைபடத்தின் படி கட்ட வேண்டும்.
5.பூச்சு வேலை (Plaster Work): Button Mark வைத்து Electrical மற்றும் Plumbing Pipe Line Packing எல்லாம் செய்த பிறகு, சுவரை நன்றாக நனைத்து தயார்படுத்தி சிமெண்ட் மணல் கலவையை குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து சரியான முறையில் மட்டமாகவும் ஒரே மாதிரியாகவும் வேண்டிய கலவை கணத்தில் பூச்சு வேலை செய்து தர வேண்டும்.
Roof Slab கான்க்ரீட் போடும்போது வேலை ஆட்களுக்கு ஒருவேளை சாப்பிடும் Tea & பலகாரமும் விட்டு உரிமையாளர் வழங்க வேண்டும்.
Roof Slab கான்க்ரீட் போடுவதற்கு தேவையான கான்க்ரீட் கலவை எந்திரம் மற்றும் வண்டி வாடகையில் பாதி (50%) வீட்டு உரிமையாளர் கொடுக்க வேண்டும்.
சுவர் மற்றும் Ceiling பூச்சு வேலை செய்வதற்கு முன்பு electrical மற்றும் plumbing pipe line வலை வைத்து பேக்கிங் வேலை செய்வதற்கு House Owner வேலை ஆட்களுக்கு Muster சம்பளம் தர வேண்டும்.
மேற்கண்ட வேலைகள் இல்லாமல், இதர வேலைகள் செய்ய வேண்டியிருந்தால், அதற்கு கீழ்கண்டவாறு Muster சம்பளம் கொடுக்க வேண்டும்.
Mason (கொத்தனார்) - ரூபாய் .900 / Day
Helper-Male (ஆண் உதவியாளர் ) - ரூபாய் .650 / Day
Helper-Female (பெண் உதவியாளர் ) - ரூபாய் .450 / Day
கைய்யொப்பம் கைய்யொப்பம்
House Owner Buidling Contractor
பணம் செலுத்தும் நிலைகள்:
முன்பணம்
7'0" மட்டம் column கான்க்ரீட் வேலை completion
Sill Slab மட்டம் கட்டுவேலை completion
Lintel மட்டம் கட்டுவேலை completion (Lintel, Sunshade, Loft & லோ Low Roof உள்பட)
Roof மட்டம் கட்டுவேலை completion (Column பாக்கி கான்க்ரீட் உள்பட)
Roof Slab & Beam Completion (சென்டரிங், கம்பி வேலை & கான்க்ரீட் உள்பட)
உட்புற தடுப்பு சுவர் மற்றும் Cupboard சுவர் completion.
கைப்பிடி சுவர் completion
வாசக்கால்/நிலை மற்றும் Grill/Gates fixing Completion
சீலிங் பூச்சு வேலை completion
உட்புற சுவர் பூச்சு completion
வெளிப்புற பூச்சு completion
மேல் மாடி Tiles வேலை completion
இதர சில்லறை வேலைகள் completion
மொத்த வேலையும் செய்து ஒப்படைத்தவுடன்:
மொத்தம்
மடக்கு படி அமைத்தல்
Kitchen மேடை அமைத்தல்:
தரை தளம்
முதல் மாடி