Friday, 6 December 2019

கொல்லிவாய் பிசாசு:

கொல்லிவாய் பிசாசு:

நான் சிறுவனாக இருக்கும்போது எந்த குழந்தையாவது சாப்பிட அடம்பிடித்தாலோ அல்லது வேறு எதாவது சேட்டைகள் செய்தாலோ நிலாவைக் காட்டி சோறு ஊட்டறது , பூச்சாண்டி காட்டி ஊட்டறது போய் கொல்லிவாய் பிசாசு வரப்போகுது என்று பயமுற்படுத்துவார்கள்.

அப்போது எனக்கு கொல்லிவாய் பிசாசு எப்படி இருக்கும் என்று தோன்றியது.
அதைவிட கொஞ்சம் விவரம் தெரிந்தவுடன் யாராவது திடீர்னு இறந்து விட்டால் நேரங்கெட்ட நேரத்தில் பல இடங்களுக்கு போய் வந்ததால் கொல்லிவாய் பிசாசு அடித்து கொன்று விட்டதாக கிராமத்தில் சொல்வார்கள்.

அப்போதும் அந்த கொல்லிவாய் பிசாசு எப்படி இருக்கும் எங்கே இருக்கும் என்று பார்க்கும் ஆவல் தோன்றியது.

அதன்பிறகு கோடைகாலங்களில் கிராமத்தை சுற்றி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடக்கும் இரவு வேடிக்கைகள் (நாடகம் , கரகாட்டம் , ஒயிலாட்டம் , திரைப்படம் ) பார்க்க இரவு நடந்து போவோம்.

அப்போது சில திசைகளில் இருந்து மரங்களுக்கு இடையே தீப்பற்றி கொழுந்து விட்டு எரியும். அதைத்தான் கொல்லிவாய் பிசாசு நம்மை பயமுறுத்த வந்துவிட்டது. அந்த பக்கம் பார்க்கக்கூடாது என்பார்கள். ஒருவர்க்கு ஒருவர் மிக அருகில் சென்று பயத்துடன் கடந்து போவோம். பெரும்பாலும் இந்த மாதிரி நிகழ்வுகள் வரிசையாக நிற்கும் பனைமரங்களிடயே தான் அதிகம் ஏற்படும்.

பின்னாட்களில் வெப்ப காலத்தில் கடும் உராய்வால் மரம் தீப்பிடித்து கொண்டதைத்தான் கொல்லிவாய் பிசாசு என்று சொல்லியிருக்கிறார்கள் என்று உணர்ந்தாலும் , இந்த பேர் எப்படி வந்தது , மனிதர்கள் இறப்பிற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்று யோசித்துகொண்டிருந்தேன்.

பல வருடங்கள் கழித்து கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் படித்து முடித்து அதன் பிறகு 10 வருடம் கழித்து பாலகுமாரனின் உடையார் நாவல் படித்தபோதுதான் கொல்லிவாய் பிசாசு எப்படி எங்கிருந்து வந்தது என்று ஓரளவுக்கு புரிந்தது.

அது எப்படி என்று பகிர்ந்து கொள்கிறேன்.

சோழர் குல ஆட்சி தமிழகத்தில் உச்சம் அடைய ஆரம்பித்த காலத்தில் சுந்தர சோழர் என்ற மன்னர் ஆட்சி புரியும்போது தங்களுடைய நாட்டின் எல்லை விரிவுபடுத்தியபோது ஏற்பட்ட போரில் சுந்தர சோழரின் மூத்த மகன் ஆதித்ய கரிகாலன், பாண்டிய மன்னன் வீரபாண்டியன் தலையை கொய்து கொன்று விடுகிறான். அப்போது பாண்டிய அரச ஆபத்துஉதவிகள்  அதற்கு பதிலடி கொடுக்க சரியான படை வலிமை இல்லாத காரணத்தால் வேறு வழியில் ஆதித்ய கரிகாலனை பழிவாங்க நினைத்திருந்தார்கள்.

அதன்படி ரவிதாசன் என்பவன் தலைமையில் பில்லி , சூனியம் , மந்திரம் போன்ற செயல்களில் நம்பிக்கை கொண்டு , அதற்க்கான வேள்விகள் செய்து சோழ நாட்டில் கலவரமும் அமைதியின்மையும் மன்னரும் வாரிசுகளும் உடல்நலம் குன்றி சாக வேண்டும் என்று முயற்சி எடுத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த நம்பிக்கை சோழ நாட்டிலோ பாண்டிய நாட்டிலோ இருந்ததில்லை. மலைப்பகுதியான சேர நாட்டில் உள்ள முன்குடுமிக்காரர்கள் மனித சக்தியை தவிர இந்த உலகத்தில் சில சூட்சம சக்திகள் இருப்பதாகவும் அவற்றை கட்டுப்படுத்தி பயன்படுத்த தெரிந்தால் தாங்கள் நினைத்ததெல்லாம் செய்துகொள்ளலாம் என்று நம்பி அவ்வாறே பலவித பயிற்சிகள் , மந்திரங்கள் செய்து மற்றவர்களை துன்புறுத்தவும் மற்றும் காரியங்கள் சாதித்து கொள்ளவும் செய்திருக்கிறார்கள். தொடர்ந்து அந்த பழக்கத்தை தங்கள் வாரிசுகளுக்கும் கற்றுக்கொடுத்து வந்திருக்கிறார்கள். அதன் தொடர்ச்சிதான் இன்றைய பிரபல கேரள மாந்த்ரீகர்கள்.

அந்த சமயத்தில் சேர நாட்டு மந்திரவாதிகளின் உதவியுடன் ஆள் நடமாட்டமில்லாத மலைப்பகுதிகளில் நடு இரவுகளில் ரவிதாசன் தலைமையில் மண்டையோடு முதலியவற்றைக் கொண்டு மந்திரங்கள் செய்து பேய்களை சோழ நாட்டில் அவிழ்த்து விட்டதாக நம்பப்படுகிறது.


ஆதித்ய கரிகாலன் எப்படி கொல்லப்பட்டான் என்பது இன்று வரை மர்மமாகவே உள்ளது. ஆனால் அவனை கொன்றது இந்த ரவிதாசன் தலைமையிலான குழுதான் என்று பின்னர் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு ஆண்கள், பெண்கள் , சிறுவர்கள் , உறவினர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் நாடுகடத்தப்பட்டார்கள். கொலைகாரர்கள் பிராமணர்கள் என்பதால் குற்றவாளிகளை கொல்லவில்லையாம். ஆதித்ய கரிகாலன் கொல்லப்பட்டு வீரநாராயண (வீராணம்) ஏரியில் மிதந்தாக சொல்லப்படுகிறது.

சரி இதற்கும் கொல்லிவாய் பிசாசுக்கும் என்ன சம்மந்தம் என்றால், ரவிதாசன் குழு அடர்ந்த காடுகளில் இருந்து நள்ளிரவில் மந்திரம் செய்து சூட்சம சக்திகளை நாட்டுக்குள் அனுப்பி பிரச்சினைகளை ஏற்படுத்தினார்கள் என்று நம்படுகிறதல்லவா? அவையெல்லாம் அவர்கள் கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காடுகளில் இருந்து ஏவப்பட்டதாக நம்பப்பட்டது. அதனால் ஊருக்குள் யாருக்காவது பேய் பிடித்திருந்தது என்றால் கொல்லிமலை பிசாசு , கொள்ளிவாய் பிசாசாக பயங்கரமாக உருவாக்கப்படுத்தப்பட்டு சோழ நாட்டில் மட்டுமல்லாமல் சோழர்கள்  அதன் பிறகு மொத்த தமிழ்நாட்டையும் ஆண்டதால் எங்கும் பரவியிருக்கிறது . அது இன்றும் தொடர்கிறது.

இதெல்லாம் ஒரு matter . இதையெல்லாம் ஒருவன் மெனக்கெட்டு எழுதியிருக்கிறான் என்று நினைக்கிறீர்களா ?

வரலாறு முக்கியம் அமைச்சரே !!!! 


















Wednesday, 4 December 2019

திருவள்ளுவரை வைத்து மதவாதிகளும் அரசியல்வாதிகளும் கலகம் செய்துகொண்டிருக்கையில் , அவர் எக்காலத்திற்கும் ஏற்ற பல குறள்களை எழுதி சென்றுள்ளார், அதில் ஒன்றிரண்டை படித்து பார்த்து அதன் படி நடக்க வேண்டும் என்று மன உறுதி கொண்டு தேடும் போது இன்றைய corporate உலகத்திற்கு ஏற்ற மாதிரி ஒரு குறள் கண்ணில் பட்டது , அந்த குறள் எந்த குறள் அதன் பொருள் என்ன என்று பார்ப்போம்.


திருக்குறளில் MANAGEMENT


அதற்கு அச்சாரமாக ஒரு குறளையாவது நண்பர்களுடன் பகிர்ந்து விடுவது என்று Leadership அதிகாரத்துக்குப் போனேன். எங்கய்யா இருக்கு அந்த அதிகாரம் என்கிறீர்களா? இறைமாட்சி.
முதல் குறளே ஒரு புத்தகம்  எழுதும் அளவுக்குச் செய்திகளை உள்ளடக்கியிருக்கிறது. இயன்றவரை சுருக்கமாய்த் தர முயல்கிறேன்.
படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு

கொஞ்ச நேரம் ராஜா மந்திரி கோட்டை எல்லாம் மறந்து விடுங்கள்.
படை = Task force அல்லது Trouble Shooters : எல்லாவற்றையும் திட்டமிட்டுச் செய்தாலும், Failure Mode Effect Analysis எல்லாம் செய்தாலும் Crisis வரத்தான் வரும். அந்த Crisis களை எதிர்கொள்ளும் திறன் மிக்க ஒரு Team இருத்தல் வேண்டும்.
குடி = Team. மக்கள் என்பதும் குடி என்பதும் வேறுபட்டவை. மக்கள் எல்லோரையும் குறிக்கும். இறையாண்மையை மதிக்கும் பொறுப்பான Citizen கள்தான் குடி. Department இன் இலக்கை உணர்ந்து அதற்காக வேலை செய்யும் Subordinate கள். வெறும் Group ஆக இல்லாமல் Team ஆக இருத்தல்.
கூழ் = Funds தன் Department க்கு Management ஐ சமாதானம் செய்து Funds பெறும் வல்லமை வேண்டும். Budget ல Maintenance க்கு Allocation இல்லைப்பா. மீதம் இருந்தா பாக்கலாம், என்கிற மாதிரி பேச்சுக்கள் வராதவாறு பார்த்துக் கொள்தல்.
அமைச்சு = Advisors, People who can substitute boss in his absence. தான் இல்லாத போது டிபார்ட்மெண்ட் ஐ திறம்பட நிர்வகிக்கும் நம்பர் டூக்கள்.
நட்பு = Cordial relationship with other departments. தானும் தன் டீமும் ஒரு தீவாக செயல்படாமல் இதர துறைகளுடன் நட்பாய் இருப்பது.
அரண் = Cultivating Integrity நிறுவனங்களில் பெரிய பிரச்சினையே அடுத்த டிபார்ட்மெண்ட் ஆசாமிகள் வந்து ‘உங்க பாஸ் இருக்கானே…’ என்று ஆரம்பித்து அவதூறு பரப்புதல். அப்படி யாராவது சொல்லும் போது ‘I know my boss you get lost’ என்று Subordinate கள் சொல்லும்படியான கலாச்சாரத்தை விதைத்தல். National integrity போல Department Integrity.
கொஞ்சம் விரிவாக உதாரணங்களுடன் எழுதினால் ஏறக் குறைய ஒரு புஸ்தகம் அளவுக்கு ஆகிவிடும் என்பது சரிதானே?