Thursday, 9 January 2025

Rental Agreement

 அன்பு மகள் யாழினிக்கு,

நீயும் (அண்ணன்) பட்டுவும் எப்படி இருக்கிறீர்கள்? நலமாகவும் கவனமாகவும் இருப்பீர்கள் என்று நம்புகிறேன். பொதுவாக ஒரு அரசும் சரி, தனி மனிதர்களும் சரி மற்றவர்களை சார்ந்தே இருந்தாலும், எப்போதும் தற்சார்பு நிலையோடு இருக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொள்ள வேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் வாழவும், நல்ல சூழ்நிலையோ கெட்ட சூழ்நிலையோ சமாளிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இப்போது சிறுவர்களாக இருந்து வளர்ந்து வந்தாலும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பவர்களாக இருக்க கூடாது. உதவியாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் பெரியம்மா/பெரியப்பா வீட்டில் இருந்தாலும் அவர்களுக்கு சிரமத்தை கொடுக்காமல் உங்கள் வேலைகளை நீங்களே பார்த்து கொள்ளவேண்டும். உங்களையும் வீட்டையும் சுற்றுப்புறத்தையும் எப்போதும் தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் வைத்து கொள்ளவேண்டும். எது கிடந்தாலும் அப்படியே போட்டுவிட்டு வேடிக்கை பார்க்க கூடாது. அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ளவேண்டும். நம்மை துன்புறுத்துபவர்களிடம் இருந்து விலகிச் செல்ல வேண்டும். மிகவும் தொல்லை கொடுத்தால் உடனே நம்பிக்கைக்கு உரிய மற்றவர்களிடம் அல்லது பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும்.

யாழினி, இப்போது பட்டு கொஞ்சம் பெரியவன் ஆகிவிட்டதால் சில நேரம் சீண்டும்போது இவன் வேண்டாம் என்றும் எனக்கு பிடிக்கவில்லை என்றும் சொல்கிறாய். அது எவ்வளவு முட்டாள்தனம் என்று தெரியுமா?

அவனுக்கு விவரம் தெரியும் முன்பும் தெரிந்த பின்பும் உன்னை பாதுகாப்பதிலும் உனக்கு கற்றுக்கொடுப்பதிலும் குறியாக இருந்து வருகிறான். நான் நமது குழந்தைகள் பொது அறிவிலும் ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என நினைத்து பாடம் நடத்தும்போது, நீங்கள் சரியாக ஞாபகம் வைத்திருக்கா விட்டாலும், கேள்விக்கு பதில் சொல்லாவிட்டாலும், உங்களை அடித்து துவம்சம் செய்யும்போது, அவனை அடிக்கும்போதெல்லாம் கலங்காமல் இருப்பவன், உன்னை அடிக்கும்போது கலங்கி விடுவான், எப்படி தன் தங்கையை அடியில் இருந்து காப்பாற்றுவது என்று யோசிப்பான். உனக்கு பதிலாக அவன் பதில் சொல்ல முயற்சிப்பான். அவனை அடிக்கும்போது அலுக்காமல் இருக்கும் அவன், உன்னை அடிக்கும்போது அவளுக்கு பதிலாக என்னை அடியுங்கள் என்று வருவான். நீ கேள்விக்கு பதில் தெரியாமல் முழிக்கும்போது , பதில் சொல் யாழினி, பதில் சொல் யாழினி என்று உனக்கு தைரியம் கொடுப்பான். நீங்கள் சிறு குழைந்தைகளாக இருக்கும்போது மருந்து களை சங்கு அல்லது மூடி மூலம் கொடுக்க முயற்சிக்கும்போது நீ கன்னாபின்னா என்று அழுது கத்தி அட்டகாசம் பண்ணும்போது அவன் இவங்க எப்படி கத்தினாழும் விடமாட்டாங்க, அதனால் மருந்தை குடித்துவிட்டு போகலாம் என்று பழகி கொண்டான்.

நாம் கொச்சியில் வாசிக்கும்போது எதோ ஒரு கேள்விக்கு நீ தவறாக பதில் சொல்லி நான் அதற்க்கு உன்னை வெளுக்கும்போது அவன் கதறி அழுது அப்படி இல்லை யாழினி இப்படி சொல்லு என்று உனக்கு சொல்லிக்கிட்டே இருந்தான். அவனைப்போல ஒருவன் உனக்கு அண்ணனாகவோ சகோதரனாகவோ கிடைத்ததற்கு நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவனைப் பற்றி பேசுவதால் உன்னை குறைத்து மதிப்பிடுவதாக அர்த்தம் இல்லை. அவனுடைய பொறுமையும், பொறுப்பும், அன்பும், பாசமும், சகிப்புத்தன்மையும் எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. பல விஷயங்களில் என்னை விட புத்திசாலியாகவும் எதையும் எளிதில் கற்றுக்கொள்கிற தன்மையும் அவனிடம் நிறைய இருக்கிறது. 

உங்களை பெற்றதால்தான் எங்களுக்கு பெற்றோர் என்ற அந்தஸ்து கிடைத்து சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கிறோம். அப்படிப்பட்ட உங்களையே சரியாக படிக்கவில்லை என்பதற்க்காக மிகவும் கொடூரமாக அடித்து துன்புறுத்தி இருக்கிறேன். அதற்காக மிகவும் வெட்கப்படுகிறேன். உங்களிடமும் அம்மாவிடமும் அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். குழந்தைகளை அடித்து வளர்ப்பதில் தவறில்லை. அனால் என்னை போல் கடவுளின் தூதுவர்களான அன்பு செல்வங்களை அப்படி துன்புறுத்தக்கூடாது. அது என் வாழ்வில் நான் செய்த மிகப்பெரிய தவறு. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன். இப்படி எழுதுவதை வைத்து, அப்பா திருந்தி விட்டார் இனி அடிக்க மாட்டார் என்று நினைக்க வேண்டாம். 

நம் குழந்தைகள் ஒழுக்கமாகவும், தைரியமாகவும் இருப்பார்கள், யாருக்கும் எந்த தீங்கும் செய்ய மாட்டார்கள், யாரிடமும் ஏமாற மாட்டார்கள், பொய் புரட்டு சொல்லாமலும் , தங்கள் உயிர் உடமைகளை பத்திரமாக பார்த்துக்கொண்டு, நன்றாக படித்துக்கொண்டும் ,அவர்கள் இருவரும் நல்லபடியாக பிழைத்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையை உருவாக்கினால் தான் அடியில் இருந்து தப்பிக்கலாம் . அது உங்கள் கைகளில் தான் உள்ளது.

யாழினி, உன்னுடைய அழகிய தமிழ் பேச்சு தான் எனக்கு மிகச்சிறந்த tonic. அதனாலதான் உனக்கு "தேன் சிட்டு" என்று பேர் வைத்திருக்கேன். அதை எப்போதும் கேட்க வேண்டும் என்று தோன்றும். நான் சமீபத்தில் பொங்கல் வந்திருந்தபோது இரவு பகலாக வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரங்களில் மிகவும் அக்கறையாக என் அருகிலே இருந்து, நான் கேட்டும் / கேட்காமலும் பட்டு எனக்கு பல உதவிகளை செய்தான். அது எனக்கு அந்த வேலையை சீக்கிரமாக முடிக்க உதவியது. அந்த சமயங்களை நினைத்து பார்க்கும்போது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது .அவனுக்கு மிகவும் நன்றி உள்ளவனாகவும் இருக்கிறேன்.

இதெல்லாம் நான் இப்போது என் சொல்கிறேன் என்றால், நான் ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் நீங்கள் ஒருபக்கம் என்று நம் குடும்பம் பிரிந்து கிடக்கிற இந்த தருணத்தில், உங்களைப்பற்றி நினைத்து பார்த்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று தோன்றியது. அம்மாவும் (வெண்ணிலா) நம்மை ஒரு பக்கம் பார்க்க வேண்டும், அவங்க அப்பாவை ஒரு பக்கம் பார்க்க வேண்டும் என்று அலைந்து கொண்டிருக்கிறாள், நாங்கள் எங்கிருந்தாலும் நம் குழந்தைகள் சமத்தாக வாழ்ந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் உருவாக்க வேண்டும். தற்போது பள்ளி முதல் கல்லூரி மட்டுமல்ல போகிற / வருகிற இடமெல்லாம் கெட்டவர்களும் கஞ்சா குடிக்கிகளும் சாராய குடிக்கிகளும் பைக் வெறியர்களும் பெருகி மற்றவர்களுக்கும் பெண்களுக்கும் துன்பம் விளைவிக்கிற இந்த காலத்தில், அதையும் மீறி தான் வாழ்ந்து காட்ட வேண்டும். ஒரு பக்கம் கெட்டவை இருந்தாலும் மறுபக்கம் நல்லவைகளும் இருந்தே ஆகவேண்டும் . நிச்சயமா இருக்கும். அதனால் மிகவும் கவனமுடன் விழிப்புணர்வுடன் இருந்து வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். 

பெரியம்மா வீட்டில் எது செய்தாலும் பிடித்த விஷயமாக இருந்தால் நன்றியும் பாராட்டும் தெரிவிக்க வேண்டும் , பிடிக்காத விஷயமாக இருந்தால் புறக்கணித்துவிட்டு கடந்து செல்ல பழக வேண்டும்.

என்ன யாழினி ? அன்புள்ள யாழினி க்கு என்று கடிதம் எழுத ஆரம்பித்து பட்டு பற்றியே அதிகமாக எழுதி இருக்கிங்க என்ற உன் mind voice கேட்கிறது. அதற்க்கு காரணம் இருக்கிறது.

நாம் எல்லோரும் சேர்ந்து பொன்னுசாமி தாத்தாவுக்கு விரைவில் பூரண குணம் அடைய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வோம்.

BE happy , ENJOY the LIFE .

என்றும் உங்கள் நலனில் அக்கறை உள்ள அப்பா,

அழகர் !






வாடகை ஒப்பந்த பத்திரம்


2024 ம் வருடம் மார்ச்  மாதம் 5 ஆம் தேதி, எண் 15/7A , தரைத்தளம், முதல் தெரு, வள்ளலார் நகர், சென்னை -26 என்ற முகவரியில் வசித்து வரும் திருமதி வெண்ணிலா  அவர்கள் 1வது பார்ட்டியாகவும் (வீட்டின் உரிமையாளர்)

சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், காரைக்குடி  வட்டம், பெத்தாச்சிகுடியிருப்பு கிராமம், கதவு எண் 544/A ல் வசித்து வரும் திரு. செ.அழகு அவர்கள் 2வது பார்ட்டியாகவும் (வாடகைதாரர்)


மேற்சொன்ன 1வது பார்ட்டிக்குச் சொந்தமான 
எண் 15/7B ,  முதல் தெரு, வள்ளலார் நகர், சென்னை -26 என்ற முகவரியில் முதல் தளத்தில் அமைந்துள்ள வீட்டினை நம்மில் 2வது பார்ட்டி
குடியிருப்பதற்காக வேண்டி 1வது பார்ட்டியினை அணுகி வாடகைக்குக் கேட்க, அதற்கு 1வது பார்ட்டி, 2வது பார்ட்டிக்கு வாடகைக்கு விடுவதற்க்கு ஒப்புக்கொண்டு கீழ்கண்ட சாட்சிகளின் முன்னிலையில் இந்த ஒப்பந்தத்தை எழுதிக் கொண்டுள்ளனர்.

ஆக, நாம் 1 வது மற்றும் 2 ம் பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வாடகை ஒப்பந்தப் பத்திரம் என்னவென்றால்,

1. நம்மில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு மாத வாடகையாய் ரூபாய் 51,500/ (ரூபாய்  ஐம்பத்தோராயிரத்து  ஐந்நூரு மட்டும்) 
பிரதி ஆங்கில மாதம் 5-ம் தேதிக்குள் 1வது பார்ட்டி வசம் கொடுத்து விட வேண்டியது.

2. 1வது பார்ட்டியிடம் 2வது பார்ட்டி முன் பணமாக இன்று 05/03/2024 ரூபாய் 1,50,000/- மட்டும் ரொக்கமாக செலுத்தி உள்ளார். மேற்படி தொகையை நம்மில் 2வது பார்ட்டி வீட்டினை காலி செய்து கொண்டு போகும் போது 1வது பார்ட்டி திருப்பிக் கொடுத்து விட வேண்டியது. மேற்படி இந்த அட்வான்ஸ் தொகைக்கு
வட்டி ஏதும் கிடையாது.

3. 1வது பார்ட்டி தற்போதுள்ள வீட்டினை எப்படி ஒப்படைத்தாரோ அதே நிலையில் 2வது பார்ட்டி மேற்படி வீட்டினை காலி செய்யும் சமயத்தில் சேதமில்லாமல் ஒப்படைக்க வேண்டும்.
  மேற்படி வீட்டில் ஏதாவது சேதம் இருந்தால் 1வது பார்ட்டி அட்வான்ஸ் தொகையில் சேதத்தின் மதிப்பை கழித்துக் கொண்டு 2வது பார்டியிடம் ஒப்படைக்க வேண்டும்.

4. 2வது பார்ட்டி மேற்படி வீட்டிற்கு உபயோகிக்கும் மின்சாரக் கட்டணத்தை மீட்டர் அளவுப்படி மின்சார அலுவலகம் / குடிநீர் அலுவலகத்தில்  தானே செலுத்திக் கொள்ள வேண்டியது.

5. இந்த வாடகை ஒப்பந்தம் இன்றைய தேதியிலிருந்து 12 மாத காலக் கொடுவிற்கு உட்பட்டது. அதாவது 05/03/24 தேதி முதல் 04/03/24 தேதி வரையிலான 12 மாத காலத்திற்கு உட்பட்டது.

6. 12 மாத காலக் கெடுவிற்குள் 1வது பார்டிக்கு வீடு தேவைப்பட்டால் 2வது பார்ட்டிக்கு 2 மாத முன்னறிவிப்பு கொடுக்க வேண்டும். அதே போல் 2வது பார்ட்டி வீட்டை காலி செய்ய விரும்பினால் 2 மாத முன்னறிவிப்பு கொடுத்து விட்டு காலி செய்ய வேண்டியது.

8. மேற்படி வாடகை ஒப்பந்தப் பத்திரத்தை 12 மாத காலம் முடிந்த பின்பு இருவரின் ஒப்புதலின் பேரில் புதுப்பித்துக் கொள்ள வேண்டியது.

9. 2வது பார்ட்டி மேற்படி வீட்டில் குடியிருப்பதைத் தவிர வேறு எந்த விதமான உபயோகத்திற்கும் பயன் படுத்த்தக் கூடாது.

10. 2வது பார்ட்டி மேற்படி வீட்டை வேறு யாருக்கும் மேல் வாடகைக்கோ அல்லது உள் வாடகைக்கோ விடக்கூடாது.

11. 2வது பார்ட்டி தொடர்ந்து மூன்று மாத காலம் வாடகையைத் செலுத்தத் தவறும் பட்சத்தில் மேற்படி வீட்டை காலி செய்ய 1வது பார்ட்டிக்கும் உரிமையுண்டு.

இப்படியாக நாம் இரண்டு பார்ட்டிகளும் சேர்ந்து மனப்பூர்வமாய் சம்மதித்து எழுதிக் கொண்ட வீட்டு வாடகை ஒப்பந்தப் பத்திரம்.



வாடகை சொத்து விபரம்.

15/7, 01-முதல் தளம்,  வள்ளலார் நகர், வடபழனி, சென்னை -600026 என்ற விலாசத்தில் முதல் தளத்தில் அமைந்துள்ள வீடு மட்டும் இந்த வாடகை ஒப்பந்தத்திற்கு உட்பட்டது.




1வது பார்ட்டி                                                                                                           
2வது பார்ட்டி
(வீட்டின் உரிமையாளர்)                                                                                      (வாடகைதாரர்)



சாட்சிகள்


1)




2)

No comments:

Post a Comment