Thursday, 2 June 2016

TN MINISTER

மத்திய சமூக நீதித் துறையின் சார்பில், மாநாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், தமிழகத்தின் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பங்கேற்றார். அவரது உரை முழுவதும், தமிழகத்தின் முதலமைச்சரின் பெருமையை பேசுவ தாகவே இருந்தது. 
ஒன்பது முறை, 'மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்' என, புகழ்ந்துள்ளார்.
அம்மாவின் சீரிய ஆட்சியில் தமிழகம் வீறு நடை போட்டு முதல் மாநிலமாக அனைத்து துறைகளிலும் திகழ்கிறது. நாம் அமெரிக்கா போன்று வளர்ந்து நிற்கிறோம். நாம் நம்முடைய பெருமையை பேசுவதில் என்ன தவறு. நமக்கு தான் உலக வங்கி இருக்கிறதே? மத்திய அரசு எதற்கு ? என்ன மிஞ்சி மிஞ்சி போனா மூணு கோடி பேறு கக்கூசு இல்லாம கம்மா கரையிலையும் கருவேலன்காட்டுளையும் ஒதுங்கறான். இது தவறா? அவன் இயற்கை உபாதையை இயற்கையின் மடியில் கழிக்கிறான். சாலைகள் மட்டமாக இருந்தன ஆனா தேர்தல் வந்தவுடன் பாருங்க எங்க ரத்தத்தின் ரத்தங்களின் வேகத்தை எப்படி ரெடிமேடு சாலைகளை இறக்குனோம் பாத்தீங்களா? மின்சாரத்தை காசு கொடுத்து வாங்கியே கரெக்டு பண்ணோம் பாத்தீங்களா? விவசாயிகளுக்கு 80 கோடி 100 கோடிகள்ள ஆறுகளை இணைச்சு விட்டாலும், 50 கோடி ஒதுக்கி செயற்கை ஏரிகளை உருவாக்கி கொடுத்தாலும் அவன் வளம் பெறுவான். ஆனால் அதற்கு நாம் ஏன் நிதி ஒதுக்க வேண்டும் மத்திய அரசுக்கு பொறுப்பு இல்லையா என்று எங்கள் அம்மையார் அந்த விசயதிற்கு மத்திய அரசை கை காட்டிவிட்டு, விவசாயிகளின் மனைவிகளை குளிர்விக்கும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர், பேன் கொடுத்தார்கள், இப்போது ஸ்கூட்டியும் கொடுப்பார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு இலவச சைக்கிள், இலவச மடி கணினி என்று அள்ளி வாரி வழங்கினார்கள். விவசாயிக்கு தேவையான சரக்கையும் கொடுத்தார்கள் ஏன் விவசாயிகளை மகிழ்ச்சி படுத்த. தான் ஆட்சிக்கு வந்தால் ராணுவத்தை அனுப்பி தமிழர்களை காப்பேன் என்று சொன்ன அம்மா மீனவர்களை காக்க வெறும் கடிதம் தானே எழுதுகிறார் என்று உங்களுக்கு குழப்பாக இருக்கலாம். சட்டத்தை நம் கையில் எடுப்பது தவறு என்ற காரணத்திற்காக தான் அம்மா மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். இதே இலவச பொருள் என்றால் எளிதாக கொடுத்து விடுவார் எங்கள் அம்மா.

No comments:

Post a Comment