Wednesday, 22 June 2016

Naatu Nadappu

ஒரு தடவை நபிகள் அவர்களிடம் ஒரு தாய் தன் குழந்தையை கொண்டுவந்து , ஐயா  இவன் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் நிறய இனிப்பை தின்னுக்கொண்டிருக்கிறான் கண்டித்து வையுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார், அதற்கு நபிகள் இவனை நாளை கூட்டி வாருங்கள் என்று மறுமொழி கூறியிருக்கிறார். சொன்ன மாதிரியே மறுநாள் அந்த தாய் தான் குழந்தையை  நபிகள் முன்பு கொண்டுவந்து  நிறுத்தி இருக்கிறார். பிறகு அந்த குழந்தைக்கு தகுந்த அறிவுரை கூறி அனுப்பி விட்டார்.

இந்த நிகழ்வு முடிந்தவுடன் அருகில் இருந்தவர்கள் நபிகளிடம் இதை நேற்றே அந்த குழந்தைக்கு சொல்லியிருக்கலாமே ? என்று கேட்டிருக்கிறார்கள் . அதற்கு நபிகள் சொன்ன பதில் நாம் ஒருவருக்கு அறிவுரை சொல்லவேண்டும் என்றால் நமக்கு அந்த தகுதி இருக்க வேண்டும். அந்த குழந்தை செய்த தவறை நானும் நேற்று வரை செய்து கொண்டிருந்தேன். ஆனால் அது தீமை என்று தெரிந்த பிறகு நேற்றோடு அதை விட்டுவிட்டேன் . அதனால் இன்று நான் அறிவுரை சொல்லலாம் என்று கூறினாராம். ஒரு நல்ல மனிதன் / தலைவன் என்பவன் மற்றவர்களுக்கு இப்படி /அப்படி இருங்கள் என்று சொல்வதை விட தானே அது மாதிரி வாழ்ந்து காட்டவேண்டும்.
கருணாநிதி ஒருபோதும் அது மாதிரி நடந்து கொண்டதில்லை . அதற்காக அவரை விமர்ச்சிப்பவர்களுக்கும் அருகதை வேண்டாமா ?
இப்போது  main story க்கு வாருங்கள் .

முரண்பாடுகளின் மொத்த உருவம்.. கருணாவா ? ஜெயாவா ?!

இப்படி ஒரு வாக்கியத்தை கருனாவிற்கு  எதிராகச் சொன்னால், தன்னுடைய தலைவி ஜெயலலிதாவின் ஒட்டு மொத்த முரண்பாடுச் செயல்களும் மக்கள் மனக்கண் முன்னே வரிசை கட்டி கடந்து போகுமே என்று செம்மலைக்கு தெரியாமல் போனது தான் வியப்பாக இருக்கிறது..!

எம் ஜி ஆர் இனி சரிப்பட்டு வர மாட்டார், அவரை நீக்கி விட்டு என்னை முதல்வராக்கவும் என்று அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு எழுதிய கடிதத்தை மறை(ற)த்(ந்)து விட்டு... அவர் இறந்த பின்னால், தானும் அவரோடு உடன்கட்டை ஏறி விடலாம் என்று எண்ணினேன் என்று ப(வி)ம்மியதை விடவா ஒரு முரண் இருந்துவிடப் போகிறது?!

எம் ஜி ஆருக்கு ஜானகி அம்மாள் தான் மோரில் விஷம் வைத்துக் கொன்றார் என்று வாய் கூசாமல் சொல்லிவிட்டு, கொஞ்ச நாளிலேயே அவருடன் சமரசமாகி இணைந்து அதிமுகவை கைப்பற்றியதை விடவா இன்னொரு முரண்பாடு இருந்துவிடப் போகிறது?!

ராஜீவ் காந்தி கொலைக்கு திமுகவின் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான செயல்பாடு தான் காரணம் என்று சொல்லி மக்களை மதி கலங்கச் செய்து முதல் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு....
ராஜீவ் காந்தி கொலையால் தான் ஆட்சியைப் பிடித்து முதல்வராகவில்லை என்று ஒரே போடாக போட்டதை விடவா வேறொரு முரண்பாடு இருக்கப் போகிறது?!

91 தேர்தலில் விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவளித்ததாகச் சொல்லி ஆட்சியைப் பிடித்து விட்டு..., 2011 தேர்தலில் அதே விடுதலைப் புலிகளுக்கு திமுக ஆதரவளிக்கவில்லை என்று கூறி ஆட்சியைப் பிடித்ததை விடவா மோசமான முரண்பாட்டை நாம் காணப்போகிறோம்?!

ஒரு இளைஞனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து, உடனடியாக அவனுக்கு பிரம்மாண்டமாக திருமணமும் நடத்தி.... கொஞ்ச காலத்திற்குப் பிறகு அவன் மேலேயே கஞ்சா கேஸ் போட்டு உள்ளே தள்ளி, மகன் அங்கீகாரத்தை ரத்து செய்ததை விடவா இன்னொரு முரண்பாட்டை நாம் காணப் போகிறோம்?!

உதிர்ந்த ரோமங்கள் என்று வசை பாடிய நெடுஞ்செழியன் உள்ளிட்டோரை மீண்டும் தலையில் ஒட்ட வைத்துக் கொண்டதை விடவா வேறு முரண்பாடு இருக்கிறது?!

டான்ஸி வழக்கில் தன்னுடைய கையெழுத்தே அது இல்லை என்று சொல்லி குட்டுப் பட்டு மாற்றிக் கொண்டதை விடவா இன்னொரு முரண்பாட்டை தமிழகம் கண்டுவிடப் போகிறது?!

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசினார் என்று விரட்டி விரட்டி கைது செய்து தடா, பொடா என்றெல்லாம் வருடக் கணக்கில் உள்ளே தள்ளிய வைக்கோவை 2001 வெற்றிக்காக கூட்டணியில் சேர்த்துக்கொண்டதை விடவா இன்னொரு முரண்பாடு இருந்துவிடப் போகிறது?!

மதமாற்ற தடைச் சட்டம், கோவில்களில் ஆடு, கோழி பலியிட தடைச் சட்டம் போன்றவற்றை ஆரவாரமாக கொண்டு வந்து விட்டு, 2004 தேர்தலில் கிடைத்த ஆப்பிற்குப் பிறகு தடாலடியாக வாபஸ் பெற்றதை விடவா இன்னொரு முரண்பாட்டை மக்கள் கண்டிடப் போகிறார்கள்?!

திமுக ஆட்சியில் சோனியா காந்தி, நளினிக்கு காட்டிய கருணையை அசிங்கமாக விமர்சித்து விட்டு, இப்பொழுது ஏழு பேர் விடுதலைக்காக தீர்மானம், இத்தியாதியெல்லாம் போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதை விடவா இன்னொரு நகை முரண் இருந்துவிடப் போகிறது?!

மெட்ரோ ரயில் வேஸ்ட்... மோனோ ரயில் தான் பெஸ்ட்.. அதை நான் கொண்டு வருவேன்னு சொல்லிட்டு, கடைசி வரை அதற்காக சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாமல், மெட்ரோ ரயிலுக்கு பச்சைக்கொடி காட்டி போஸ் கொடுத்ததை விடவா வேறொரு முரண் இருந்துவிடப் போகிறது?!

இப்பொழுது கூட கருனா  சட்டமன்றத்திற்கு வருவதற்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்ன்னு சொல்லி ஊடகங்களின் பாராட்டினைப் பெற்று விட்டு.... சட்டமன்ற விதிகளை காரணம் காட்டி சின்னபுள்ளத்தனமான அரசியல் விளையாட்டு விளையாடுவதை விடவா வேறொரு முரண்பாட்டை தமிழக மக்கள் கண்டுவிடப் போகிறார்கள்?!

கருனா  முரண்பாடுகளின் மொத்த உருவம்ன்னு சொன்ன செம்மலைக்கு.... அவர் தலைவின் முரண்பாட்டுப் பட்டியலில் ஒரு சிறு சாம்ப்பிள் மட்டுமே மேலே உள்ளது என்பதும் நன்றாகத் தெரியும்...!!

இனிமேயாச்சும் சட்டமன்றத்தில் இந்த மாதிரி சின்னத்தனமான அரசியல் செய்யாமல், சீரியஸான மக்கள் பிரச்சினையை பேசுங்க ஆஃப்பீஸர்...!

No comments:

Post a Comment