Thursday, 26 May 2016

Southern Railway சாதனை & Periyakottai Festival

Southern Railway சாதனை 
ஒவ்வொரு நாடும் Bullet Rail, Rocket Rail, Missile Rail என்று அதி வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கும்போது காரைக்குடி to திருத்துறைபூண்டி broad guage அமைக்கும் பணி கிட்டத்தட்ட 15 வருடங்களாக நத்தை/ஆமை வேகத்தை விட மெதுவாக நடந்து வருகிறது. இந்த பக்கம் உள்ள சிவகங்கை , புதுகோட்டை , தஞ்சாவூர் மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் இத்தனை வருடங்களாக என்னதான் பிடுங்கி கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பாம்பாறு மற்றும் வெள்ளாறு ஆகியவற்றில் மணல் அள்ள காட்டிய ஆர்வத்தில் அரை சதவீதமாவது இதிலும் அக்கறை காட்டியிருந்தால் இந்நேரம் பணி நிறைவடைந்திருக்கும். மக்களும் அந்த நல்லவர்களைத்தான் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து சமுதாய பணியில் சும்மா இருக்கவும் பொது சொத்தை கொள்ளையடிக்கவும் வாய்ப்பளிகிரார்கள்.
15 வருங்களுக்கு முன்பு rail பாதையில் train ஓடியது , ஆறுகளில் தண்ணீர் ஓடியது . ஆனால் இப்போது இரண்டிலும் ஒன்றும் ஓடவில்லை . இதுதான் வளர்ச்சியோ ?

Periyakottai Festival
பெரியகோட்டை ஸ்ரீ தாமணி செல்லையனார் & பனிரெண்டைய்யனார் திருக்கோயில் திருவிழா இனிதே நடைபெற்றது. கடந்த வருட திருவிழாவே இப்பத்தான் முடிந்த மாதிரி இருந்தது. அதற்குள் இந்த வருட திருவிழாவும் சிறப்பாக நடந்து முடிந்து விட்டது.

திருவிழா என்றாலே மகிழ்ச்சிதான் , இருந்தாலும் உக்கிரமான வெயிலை நினைத்துதான் பயமாக இருந்தது . வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது . சின்ன ஆறுதல் என்னவென்றால் தேர்தல் நேரத்தில் பெய்த மழையால் எங்கும் பசுமையாக இருந்தது. இல்லையென்றால் வெயிலை சமாளிப்பது ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும்.

நான் கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு வருடமும் ஒரு நண்பரை (வேறு மாவட்டம் அல்லது பகுதியை சேர்ந்த) திருவிழாவிற்கு வரவழைத்து சிறப்பிப்பது வழக்கம். அவர்களும் நம்ம வாழ்க்கை முறை மற்றும் திருவிழா பற்றி தெரிந்து கொள்வதற்கு உதவியாக இருக்கும்.

இந்த வருடம் சில காரணங்களால் யாரையும் அழைக்க முடியவில்லை . கடைசி நேரத்தில் நண்பர் அறந்தை அண்ணாதுரை அவர்களை அழைக்கலாம் என்று முடிவு செய்து அவருடைய mobile number க்கு phone செய்தால் சிக்கவே இல்லை . அறந்தாங்கி போய் அவர் வீட்டிற்கு சென்று பார்க்கலாம் என்று அங்கு போனால் எனக்கு முகவரி மறந்து போய்விட்டது . பிறகு திரும்பி வந்து விட்டோம். 

எங்க பக்கம் திருவிழாவில் விருந்து முக்கிய பங்கு வகிக்கும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் திருவிழா , திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் அசைவம் இடம்பெறாது . ஆனால் எங்க பக்கம் அதுதான் main.

பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் கீழ்க்கண்ட items நிச்சயமாக இருக்கும்.
mutton குழம்பு 
Chicken gravy 
நாட்டுகோழி குழம்பு /ரசம்
நண்டு மசாலா 
மீன் வறுவல் 
ரத்தக்கூட்டு பொரியல் 
முட்டை 
கொண்டக்கடலை / வெண்டிக்காய் மண்டி
ரசம்
மோர் 

சில வீடுகளில் பொருளாதார காரணத்தால் சில items miss ஆகலாம் .

எல்லாம் நன்றாகவே நடக்கிறது , ஆனால் மதுதான் பெரிய பிரச்சினையாக இருக்கிறது . சிறியவர்கள் கூட சரக்கும் side dish ம் எடுத்துக்கொண்டு போய் தோட்டத்திற்குள் குடித்து விட்டு வருகிறார்கள். மது ஒளிந்து எல்லாரும் மகிழ்ச்சியாக இருந்தால் இன்னும் சந்தோசமாக இருக்கும்.

சில திருவிழா Photos.





No comments:

Post a Comment