இந்த அதிமுக திமுக இரு திருடர்களையும் விரட்ட நாம் பல காரணங்கள் சொல்லலாம். அதில் ஒன்றை sample க்கு பார்க்கலாம் .
Congress என்றால் telecom ஊழல் , ஹவாலா ஊழல் , போபர்ஸ் ஊழல் , காமன்வெல்த் போட்டி ஊழல் , 2G , நிலக்கரி ஊழல் என்றும் அதில் சுக்ராம், ராஜீவ், கல்மாடி போன்றவர்களை குறிப்பிட்டு சொல்லலாம் . (60 ஆண்டு ஆட்சியில் இன்னும் நிறைய இருக்கு, இதில் சொல்லப்பட்டிருப்பதாக ஒரு ஒப்பீட்டுக்குத்தான்) BJP என்றால் பங்காரு லட்சுமன், யெதியூரப்பா , reddy brothers, வியாபம் போன்றவற்றை குறிப்பிட்டு சொல்லலாம். இன்னும் தேசிய அளவில் லாலு, Sarath pawar ஆகியோரையும் குறிப்பிட்டு சொல்லலாம் . மற்ற கட்சிகளில் எல்லாம் இன்னார்தான் ஊழல் செய்தவர்கள் என்று குறிப்பிட்டு சொல்லமுடியும் . இன்னும் நிறைய இருக்கலாம் ஆனால் மொத்த இந்தியாவில் உள்ள ஊழல்வாதிகளின் list போட்டாலும் அது கழகங்களின் ஊழல்வாதிகளின் எண்ணிக்கையை மிஞ்ச முடியாது.
ஆனால் இந்த இரு கழகங்களில் நாம் யாரையும் குறிப்பிட்டு சொல்லமுடியாது. ஏனென்றால் இவர்களில் தலைமை முதல் ward counsellor வரை பொதுச்சொத்தை கொள்ளையடித்தவர்கள்தான், ஏழைகளின் நிலத்தை அபகரத்தவர்களதான், யாரையும் வீடு கட்டவிடாமலும் , தொழில் செய்யவிடாமலும் commission வாங்கியவர்கள்தான். தங்களுடைய சுயநலத்திற்காக பல பேரை கொன்றவர்கள்தான். அதனால் தயவுசெய்து இந்த நாசகார கூட்டத்தை இந்த தேர்தலில் புறக்கனியுங்கள்.
சோழப்பேர்ரசு இராஜேந்திர சோழன் காலத்தில் உச்சத்தில் இருந்ததாக வரலாறு கூறுகிறது. பாண்டிய பேர்ரசு ஜடவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் உச்சத்தில் இருந்ததாக கூறுவார்கள் . அதுபோல கழகங்களின் கொள்ளை பேர்ரசில் ஊழல் ஆட்சியின் உச்சம் இதுதான். இவர்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்தால் அதையும் இவர்களே முறியடிப்பார்கள். இது நமக்கு தேவையா?
No comments:
Post a Comment