அதிமுக, திமுக ஆகிய கட்சிகளால் நாட்டுக்கும், வீட்டிற்கும், உயிருக்கும் கேடு என்கிறார்கள். ஆனால் அதுமட்டுமல்ல இவர்களால் வருங்கால தலைமுறைக்கும் கேடு. ஒரு சின்ன எ.கா.
நமக்கு கிடைத்திருக்கிற ஆதாரங்களின் படி 2000 வருடங்களுக்கு முன்பு முற்கால பாண்டியர்கள், சோழர்கள் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள். பிறகு களப்பிர்ர்கள் , பல்லவர்கள் , பிற்கால சோழர்கள் , பாண்டியர்கள் அதன்பிறகு சுல்தான்கள் , மராத்தியர்கள் , விஜயநகர பேர்ரசு, நாயக்கர்கள் , ஆங்கிலேயர்கள் ஆகியோர் ஆண்டிருக்கிறார்கள். நாட்டு விடுதலைக்குப்பிறகு congress 20 வருடம் ஆட்சி செய்திருக்கிறது. இத்தனை ஆண்டு இவர்களின் ஆட்சியில் யாரும் எந்த அரசும் இயற்கை வளங்களை கபளிகரம் செய்யவில்லை. இயற்கை இருந்தால்தான் எதிர்கால சந்ததிகள் வாழமுடியும் என உணர்ந்து இயற்கை வளங்களை பாதுகாத்துவிட்டு சென்றார்கள். அதுமட்டுமில்லாமல் நீர் மேலாண்மையில் உலகிற்கே முன்னோடியாக கல்லனையில் இருந்து கோயில் குளம் வரை உருவாக்கினார்கள். ஒவ்வொரு அரசும் அதற்கு முந்தய அரசைவிட சிறப்பான நீர்ப்பாசன திட்டங்களையே செயல்படுத்தி வந்திருக்கிறார்கள் . அதுதான் நாகரிகமும் பண்பாடும்கூட. ஆனால் இந்த இரு கழகங்களும் ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நடந்தது இவர்களின் ஈவு இறக்கமற்ற சுயநலம் மற்றும் பேராசையால் இயற்கை வளங்கள் அனைத்தும் போட்டிபோட்டுக்கொண்டு சூறையாடப்பட்டுள்ளன். நாமும் எந்த வெட்கமும் இல்லாமல் இவர்களை மாறி மாறி கொள்ளையடிக்க வாய்ப்பளித்து வருகிறோம். இப்பவே பல கிராமங்கள் வாழ வழியில்லாமல் நகரத்தை நோக்கி குவிகிறார்கள். அதனால் நகரங்களில் தண்ணீர் பற்றாக்குறை, நோய்கள் வேகமாக பரவுதல், விடு பற்றாக்குறை , போக்குவரத்து நெரிசல் போன்ற பல பிரச்சினைகள் உருவாகின்றன. அதனை சமாளிக்கவும் ஒரு துப்புமில்லை. ஒவ்வொரு வருடமும் மழை குறைந்துகொண்டே வருகிறது , வெயில் கூடிக்கொண்டே போகிறது. போன வருடம் மாதிரி விதிவிலக்காக அதிக மழை பெய்தாலும் (அதுவும் நாலைந்து மாவட்டங்கள்தான்) அதை சேமிக்கவும் வழியில்லை. மொத்தத்தில் இந்த தமிழகத்தை மக்கள் வாழ முடியாத பிரதேசமாக மாற்றிவருகிறார்கள். தயவு செய்து இந்த தேர்தலிலாவது இந்த திரு திருடர்களின் ஆட்சிக்கு முடிவுரை எழுதுங்கள். இல்லையெனில் வருங்கால தலைமுறைக்கு துரோகம் செய்தவர்கள் ஆவீர்கள். இதில் உங்கள் சந்ததியினரும் அடக்கம்.
No comments:
Post a Comment