உலகிலேயே தம் மொழிக்கென்று போராட்டம் நடத்தியவர்கள் தமிழர்கள் தான் என்று நினைக்கிறேன். தமிழ் மொழிக்கென்று கோயிலும் காரைக்குடியில் கட்டியிருக்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ் மேல் பற்றும் அன்பும் கொண்டவர்கள் தமிழர்கள். இது கடந்த காலம் .
இதற்கு முன்பு இந்தி திணிப்பிற்கு எதிராக போராடும்போதெல்லாம் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது . ஆனால் இப்போது அப்படி ஒரு தேவை இருந்து ஒரு போராட்டம் நடந்தால் அந்த அளவுக்கு ஆதரவு இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.
இந்தி திணிப்பிற்கும் இந்தி கற்று கொள்வதற்கும் வித்தியாசம் தெரியாமல் மற்றும் இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டங்களின் வரலாறு தெரியாமலும் பல பேர் இன்றைய காலத்தில் இந்தி தெரியாததால்தான் என்னால் வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை என்று கூறிக்கொண்டு இந்தியை ஆதரிக்க முன் வந்திருக்கிறார்கள். அதற்கு பக்க பலமாக தினமலர் , துக்ளக் போன்ற பத்திரிக்கைகளும் , BJP யும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். நான் தான் இந்தியாவிலே மிக சிறந்த பத்திரிக்கையாளர் , அறிவாளி என நினைத்திக்கொண்டிருக்கும் "சோ" மாரிசாமி ஏன் இந்தியில் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்க வில்லை. இந்தி தெரிந்தவர்கள் / படித்தவர்கள் தான் தேசப்பற்று உள்ளவர்கள் என்று பிரச்சாரம் செய்யும் "தினமலம்" இந்தியில் நாளிதழ் நடத்தவில்லை. பொதுவாக இந்த அவாள் Groups தேசியம் பேசினால்தான் பொய் புரட்டு எழுதி சம்பாதிக்க முடியும். அதனால்தான் தொடர்ந்து அந்த காரியத்தை கவனமாக செய்து வருகிறார்கள்.
இந்தியை ஆதரிப்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம் அவர்களின் கருணாநிதி எதிர்ப்பு நிலைப்பாடே ஆகும். அதற்கு அவர்கள் கூறும் காரணம் ஓரளவுக்கு ஏற்று கொள்ளக்கூடியதாகும்.
எப்படியென்றால் ஊரெல்லாம் இந்தி எதிர்த்து பிரச்சாரம் செய்துவிட்டு தன் வாரிசுகளை இந்தி கற்றுக்கொள்ள வைத்திருக்கிறார் என்றும் அதற்கு மேல் தயாநிதி மாறனை ஏன் அமைச்சராக ஆக்கினீர்கள் என்று கேட்டபோது அவருக்கு நன்றாக இந்தி தெரியும் என்று கூறியதும் காரணமாக இருக்கலாம்.
ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விசயம் என்னவென்றால் கருணாநிதி என்று ஒரு பித்தலாட்ட அரசியல்வாதியின் மேல் உள்ள வெறுப்பால் இந்தியை ஆதரிக்கலாமா ? என்று யாரும் யோசிப்பதில்லை. ஏனென்றால் இந்தி திணிப்பை கருணாநிதி என்ற ஒருவர் மட்டும் முன்நின்று நடத்தவில்லை . அதற்காக தமிழகம் கொடுத்த விலை மிக அதிகம். எத்தனையோ இளைஞர்கள் தங்கள் உயிரை மாய்திருக்கிறார்கள் . பல பெண்கள் சிறுவர்கள் , பொதுமக்கள் , குறிப்பாக மாணவர்கள் , ஆசிரியர்கள் என்று பலதரப்பட்ட மக்களும் உண்மையான உணர்வோடு போராட்டத்தில் பங்கெடுத்துள்ளனர். அவர்களின் தியாகம் எப்பேற்பட்டது அதை மறக்கலாமா ?
பெரியார் , ம.பொ .சி , மறைமலை அடிகள் , அண்ணாதுரை , பாரதிதாசன் , கி .ஆ .பெ .விசுவநாதன் , ஏ .டி .பன்னீர்செல்வம் , சோமசுந்தர பாரதி , மு .அப்பாதுரை , முடியரசன் , லக்குவனார் ,மூவலூர் ராமாமிர்தம் , பி. கலிஃபுல்லா, ஜி. டி. நாயுடு, கருமுத்து தியாகராஜ செட்டியார் போன்ற பல தலைவர்களும் அறிஞர்களும் போராட்டத்தில் பங்கெடுத்து அதற்காக பல இன்னல்களை சந்தித்து இருக்கின்றனர் . மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு பெற்ற அந்த போராட்டத்திற்கு காரணம் தமிழர்களின் சுயமரியாதையை அன்றி வேறொன்றும் இல்லை. அவர்களின் தன்மானத்தை கொச்சை படுத்தலாமா ?
இந்தி எதிர்ப்பு மட்டுமில்லை , வெள்ளைக்காரன் எதிர்ப்பிலும் இந்தியாவிலே தமிழன்தான் முன்னோடியில் இருந்தான் . காந்தியும் நேருவும் திடீரென்று வெள்ளைக்காரனிடம் இருந்து விடுதலை வாங்கி தரவில்லை.அதற்கு முன்பு பல தன்மானம் உள்ள மக்கள் மற்றும் மன்னர்களால் மிகப்பெரிய தியாகம் செய்யப்பட்டிருக்கு . அதில் தமிழகத்தில்தான் அதிகமாகவும் முதன்மையானதும் போராட்டங்கள் நடத்தப்பட்டன . பல பேர் தங்கள் உயிர் மற்றும் உடமைகளை இழந்திருக்கின்றனர். எ.கா - பூலித்தேவன் , தீரன் சின்னமலை , கட்டபொம்மன் , மருதுபாண்டியர் , வேலுநாச்சியார் , வ.உ.சி , சுப்ரமணிய சிவா , பாரதி , காமராஜர் போல தலைவர்கள் பொதுமக்கள் என்று பலர்.
இப்போது இந்தியை ஆதரிப்பது எனக்கூறுவது எப்படி இருக்கிறது என்றால் இப்ப உள்ள ஆட்சியாளர்கள் சரியில்லை அதனால் அனைத்து விடுதலை போராட்ட வீரர்களின் தியாகத்தை கொச்சை படுத்திவிட்டு , இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசை நிறுவ காரணமாக இருந்த Robert Clive க்கே தவறு செய்தபோது தண்டனை கொடுத்த வெள்ளைக்காரனே மேல் என அவர்களை திரும்ப அழைப்பதுபோல் இருக்கிறது.
பொதுவாக இந்தி எதிர்ப்பு என்பதே தவறு , ஏனென்றால் இங்கு நடந்தது /நடப்பது இந்தி திணிப்பை எதிர்ப்பது. இந்தியை / இந்தி கற்றுக்கொள்வதை யாரும் எதிர்க்கவில்லை . இந்தி பிரச்சார சபா 1925 இல் இருந்து சென்னையில் இயங்கி வருகிறது . அதை யாரும் எதிர்க்கவில்லை .
நானும் புத்தகம் மூலம் , பணி புரியும் இடத்தில் என்று தொடர்ந்து இந்தி கற்று வருகிறேன். இப்ப சில பேருக்கு இந்தி தெரியாததால் நான் முன்னேறவில்லை என்று கூறுவது fashion ஆகிவிட்டது . நானும் தமிழ்நாட்டைத்தவிர அதிகமான இந்தி பேசுவோர் வேலை செய்யும் MNC கம்பெனிகளில் பணி புரிந்திருக்கிறேன் . எல்லா இடத்திலும் எனது திறமைக்கும் அனுபவத்திற்கும்தான் வேலை கொடுக்கிறார்களே தவிர இந்தி தெரியும் என்பதற்க்காகவோ தெரியாது என்பதற்காகவோ யாரும் வேலை கொடுப்பதில்லை. இந்தி தெரிந்தால் construction feild இல் ஒரு added அட்வான்ஸ் தான். ஆனால் அதுமட்டும் நம்மை உயர்ந்த இடத்திற்க்கு கொண்டு போகாது. நமக்கு தேவை என்றால் இந்தி மட்டுமில்லை எந்த language கற்றுக்கொள்ளலாம்.
ஒருவேளை இந்தி தெரிந்தால்தான் மத்திய அரசு வேளைகளில் நிர்பந்தம் கொடுத்தால் , அதுதான் இந்தி திணிப்பு , அதை எதிர்த்து நாம் மீண்டும் போராட வேண்டும் . தாய்மொழியில் passport , passbook பெறமுடியாத துரதிஷ்ட சாலிகள் உலகிலேயே இந்தியாவில் உள்ள இந்தி பேசாத மாநிலத்தவர்கள்தான் . இதை எதிர்க்க வேண்டாமா ?
அதே போல் இந்தி தெரிந்தால் பாணி பூரி தான் விற்கலாம் என்று கூறுவதும் சுத்த அபத்தம் . இங்கு இந்தி வேண்டுமா ? வேண்டாமா ? என்று விவாதிப்பது ஓரளவுக்கு படித்தவர்கள் தமிழ்நாட்டைத்தவிர வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்லும்போது சந்திக்கும் பிரச்சினை பற்றித்தான் . பாணி பூரி விற்பவர்கள் பெரும்பாலும் உயர்கல்வி படிக்காதவர்களாகத்தான் இருப்பார்கள் . அதனால் அவர்களுடன் ஒப்பிட்டு பார்க்க கூடாது .
இந்தி திணிப்பு எதிரான போராட்டம் என்பதின் முக்கியத்துவத்தை குறைப்பதற்குத்தான் January -25 ஆம் தேதியை மத்திய அரசு தேசிய வாக்காளர்கள் தினமாக அறிவித்துஇருக்கிறது . இல்லையென்றால் இதை பற்றி எல்லாரும் விவாதிப்பார்கள் . அதை தடுப்பதற்கான நடவடிக்கையே அது. தமிழ்நாட்டில் ஒரே ஒரு நாளிதழை தவிர அனைத்து முக்கியமான ஊடகங்களும் ஜனவரி -25 ஆம் தேதி அன்று இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பற்றி ஏதாவது ஒரு article பதிவு செய்வார்கள் அல்லது நிகழ்ச்சி நடத்துவார்கள் . ஆனால் தினமலம் என்ற நாளிதழ் மட்டும் அப்படி ஒரு வரலாற்று நிகழ்வே நடக்காத மாதிரி கடந்து செல்வார்கள் . ஏனென்றால் அவர்களும் அவர்களைப்போல அவாள்களும் தான் நாட்டுப்பற்று உள்ளவர்கள் என்று கூறிக்கொண்டு தமிழில் தொழில் நடத்தி சம்பாதிப்பார்கள்.
இன்னும் சில அதிகப்பிரசங்கிகள் ஒரு படி மேலே போய் இந்தி கற்றுக்கொள்வதால் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டு இந்தி திணிப்பை ஆதரிக்க முன் வருகிருறார்கள். இந்தியை தான் சுய விருப்பத்தில் கற்றுக்கொள்வது வேறு. அது தவறில்லை . இந்திதான் இந்தியாவின் மொழி , அதன் மேலாதிக்கத்தை நிறுவ முயற்சிப்பதும், அதை அனைவரும் கற்றுத்தான் ஆகவேண்டும் என்று திணிப்பதை ஏற்றுக்கொள்வது வேறு. அதைத்தான் மத்திய அரசு தொடர்ந்து செய்கிறது.
ஒரு மொழி மீது இன்னொரு மொழி ஆதிக்கத்தின் விளைவை 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த தமிழ் பத்திரிக்கைகளை படித்தால் புரிந்து கொள்ளலாம். இன்றைய தலைமுறைக்கு சுத்தமாக புரியாது . அந்த அளவுக்கு சமஸ்க்ரித ஆக்கிரமிப்பால் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்டிருக்கும். அதை சுயமரியாதையோடு எதிர்த்து போராடியதன் விளைவால் தான் இன்றைய அழகான இனிய தமிழ் கிடைத்திருக்கிறது. இப்போது ஆங்கில தாக்கத்தால் அதுவும் சிதைந்து வருவது கவலைக்குறியது.
ஒரு புரிதலுக்காக வேறு இரு நபர் Quara வில் எழுதிய comments ஐ பதிவு செய்கிறேன்:-

1) What Tamilnadu realized in 1950's is now felt in other non-Hindi
speaking states. Anti-Hindi moves are fastly spreading in other non-Hindi
speaking states. In the past 50+ years of post-colonial India, Hindi speaking
states have not performed in either economical or social parameters. It is
non-Hindi speakings states, that are leading in these parameters,
Economically - Marathi, Tamil and Punjabi leads
Socially - Malayalam and Tamil leads
May be it is time for Hindi-speaking states to learn - other Indian languages to improve their lives.
Economically - Marathi, Tamil and Punjabi leads
Socially - Malayalam and Tamil leads
May be it is time for Hindi-speaking states to learn - other Indian languages to improve their lives.
2) Just try to imagine the following scenario, it would be easier
that way I guess.
Jayalalitha becomes the PM of India, with the help of a few coalition partners (Naidu from Andhra, Shiv Sena from Maharastra, Mamtha Benarjee from Bengal, a few other smaller parties and North Eastern parties).
Till now, each Indian state has its own language and the constitution recognizes all those as official languages. There is no national language.
She feels that this is not helping in unifying India. So she imposes that Tamil should be taught in all the states in India, because Tamil is the oldest language in the country and possibly the world. It has a rich literature unrivalled by any other language. It is spoken in many south east Asian countries, so it will help in foreign relations as well.
So, she passes a circular, saying all government communications will now be in two languages, English and Tamil.
What will the people of UP, Bihar, Haryana and Madhya Pradesh do? I guess they will fight against Anti-Tamil-Imposition.
So tell me, should this agitation be considered anti-national agitation?

நிறய சொல்லிக்கொண்டே போகலாம் . ஆனால் முடிவாக என்னால் ஒன்று சொல்ல முடியும்.
காலத்திற்கு ஏற்ப எல்லாம் மாறிக்கொண்டேதான் இருக்கு . அந்த வகையில் நாமும் சில மாற்றங்களுக்கு தயார் படுத்தி கொள்ளலாம் . அது என்னவென்றால் அனைத்து north indian state லும் ஏதாவது ஒரு south indian language ஐ விருப்ப பாடமாகவும் , அனைத்து south Indian state லும் ஏதாவது ஒரு north indian language ஐ விருப்ப படமாகவும் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யலாம்.
அனைத்து மத்திய அரசு அலுவலகங்களில் இந்தி,English மற்றும் அந்தந்த மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் .
நன்றி !
No comments:
Post a Comment